நண்பனே
பயின்ற பத்து வருடமும்
ஒரு நொடியாய் போக
இருக்கும் நாட்களை
ஒரு யுகமாக்கி பார்க்கவே
இன்னும் ஒரு யுகம் வேண்டும் எனக்கு
வகுப்பறையில் இருக்கையில்
உன் பெயரின் முதலெழுத்தினையும்
என் பெயரின் முதலெழுத்தினையும்
செதுக்கி எனக்காக ஆசிரியரிடம்
நீ அடி வாங்கியபோது
உனக்காக அழுதவன் நான்
கால் மணி நேர இடைவெளியில்
கபடி விளையாடியபோது
என் கால்சட்டை கிழிந்ததை
கள்ளச்சிரிப்பால் சக மாணவர் காட்ட
அதை கண்களால் சிமிட்டி
கைகளால் மறைத்தவன் நீ .....
ஒருநாள் உன்னிடம்
ஒருமணி நேரம் பேசமாட்டேன்
என்று சபதம் செய்தேன்
திடீரென்று ஒரு சத்தம் !!1
நேரத்தை சரியாகக்காட்ட கடிகாரம் அலறியது
ஏதோ நம் ஒருமணி நேர பிரிவிற்கு
ஓலமிட்டதுபோல் தோன்றியது எனக்கு
அன்று உணர்ந்தேன்
ஒரு வருடம் பேசியே கழிந்த
நேரத்தைவிட ஒருமணி நேரம்
பேசாமல் கழிந்த பொழுது
என் நட்பு காலத்தில் பாலைவனமே ..........!!!
நட்பின் ஆழம்
கடலின் ஆழத்தைவிட பெரிது
எனசொன்னவரிடம் கோபம் எனக்கு
நட்பின் ஆழத்தை அறிவதைவிட
அதில் நீந்த துடிப்பவன் நான்
நட்பு என்பது காற்றைப்போல
அதை
சுத்தமான மனதுடன்
சுவாசிக்க கற்றுக்கொள்ளுங்கள் .........!!.
கவிதாயினி நிலாபாரதி !!!