மண்ணில் தவழும் என் மடி மீன்
மண்ணில் தவழும் என் மடி மீன்
கண்ணே செவ்விதழ் குவித்துப் பசியாற உன்
வண்ணப் பொன்மேனி மிளிர்ந்திடத் தாயமுதாய் என்
பெண்மையின் உதிரம் உருக்கி உனக்கு ஊட்டிடுவேன்
எண்ணமெல்லாம் வடித்து அதிலே நீ சிணுங்கத்தான்
விண்ணின்று வந்த வைகறையின் இளங்காற்றில் உன்
வெண்ணுடல் சிலிர்க்க அள்ளி அணைத்து என்
பண்ணொன்றில் இதமாய் நீ கண்ணுறங்கச் செய்திடுவேன்!!