பள்ளிச் செல்லும் குழந்தையின் மனதின் குமுறல்கள்

புத்தகம் தூக்கி படிக்கச் செல்லும்
பயணம் செய்யும் பட்டாம் பூச்சி
விட்டம் பார்த்து வரப்பினில் -நடந்து
காலை மாலை நேரம் போச்சு....

கதிரவன் செல்லும் திசையில் - தினமும்
தொடரும் பயணம் தொலைவினில் முடியும்
சாலையில்லா வரப்புகளின் மேலே
சண்டைகள் இட்டு நடந்தே செல்வோம்

பயணம் செய்து பள்ளியை அடைந்தோம்
தமிழ் தாய் வாழ்த்து இனிதே தொடரும்
குயிலும் பாட தொடர்ந்திடும் பாடல்
தோய்வின்றி செல்லும் தினமும் காலை

வீட்டு வேளை சொன்னதை மறந்து
என் விட்டின் வேலை செய்தேன் - என்று
பாதம் வலிக்க வாசலில் நிற்ப்பேன்
பார்வை மங்கி சோகத்தில் தவிப்பேன்


மத்திய உணவு வழங்கும் வேளை
மனதில் மகிழ்ச்சி சிறிது பூக்கும்
கணக்கு போட வேண்டும் - என்று
காயம் செய்வார் கணக்கு டீச்சர்


சட்டை கொடுத்தார் சாதி ஒழிக்க
கட்டையால் அடிக்க காரணம் என்ன?
வன்முறை தூண்டும் பாடம் கற்றால்
வளர்ந்த தலைமுறை குறை தானே சொல்லும்

பட்டினியோடு படிக்க வந்தோம்
பாதங்கள் வலிக்க கடந்து வந்தோம்
நெடு நாள் கனவு என்னவென்று
பள்ளியில் யாரும் கேட்கவும் இல்லை

கடைசி பாடவேளையும் முடியும்
எங்கள் கூச்சல் காற்றில் உடையும்
வீட்டுக்கு விடை பெற செல்லும் வேளை
வணக்கம் டீச்சர் எனச் சொல்லி செல்வோம்....

(கோ..எழிலன்)

எழுதியவர் : (5-Aug-14, 3:44 pm)
பார்வை : 72

மேலே