என் கண்ணீருக்கு விலை சொல்லுங்கள்

என் உடலுக்கு
விலை தீர்மானித்து
என்னோடு உறவு கொள்ளும்
ஆண்களே
என் கண்ணீருக்கு
விலை சொல்லுங்கள்

பங்களாவிற்கு
ஆசைப்பட்டு
இந்த படுகுழியில்
விழவில்லை
என் குடும்பத்தின்
வயிற்று பசிக்காக
விழுந்தேன்

ராமன் பலர்
என்னிடம் ராவணனாய்
நடந்தது உண்டு
ஆனால்
எந்த ராவணனும்
ராமனாய் நடக்க வில்லை

என் பாதுகாப்பிற்கு
எந்த ஆண்மகனும்
கட்டாத தாலியை
அவர்கள் பாதுகாப்பிற்கு
நான் தினமும்
கட்டி கொள்கிறேன்

காக்க வேண்டிய
அரசாங்கமும்
எங்களை
ஒரு கருவியாக தான்
பார்க்கிறது
இல்லை என்றால்
இதை ஒரு
தொழிலாய்
அங்கிகரித்து இருக்காது (மும்பை)

உடலை விற்று
என் உடல் மறைக்க
துணி வாங்கும் அவலம்

பிள்ளை பெற்று
கொள்ள
நினைக்க வில்லை
பெற்று கொண்டால்
என் குழந்தைக்கு
நான் பெயர் வைக்கும்
முன்னே
பெயர் வைக்க
இந்த சமுதாயம்
காத்து கொண்டு இருக்கிறது

மனபூர்வமாய்
விருப்பம் இல்லாமல்
என் உடலை
ஆண்கள் தொடும்
போதேல்லாம்
நான் செத்து விடுகிறேன்
அவர்களுக்கு
தெரியாது
அவர்கள் உறவு கொண்டது
என் பிணத்தோடு

நிரபராதி
குற்றவாளி
பிரித்து பார்க்கும்
சமுதாயம்
எங்களை மட்டும்
ஒன்றாகவே பார்க்கிறது

கற்பழிப்பு குற்றம்
குறைய காரணமே
நாங்கள் தான்

பாவம் செய்தவர்கள்
குளித்து கறையான
கங்கை
நாங்கள் குளிக்கும்
போது
புனிதம் ஆகிறது

படைத்த ஆண்டவனுக்கு
தெரியும்
நாங்கள் பாவிகள்
இல்லை என்று!!!

எழுதியவர் : கார்த்திக் (8-Aug-14, 6:51 pm)
பார்வை : 118

மேலே