கனவே கலையாதே

கனவே கலையாதே
நான் காணும் அற்புதக்
கனவே கலையாதே

இந்தியா எங்கும் பசுமையைக் கண்டேன்
அஹிம்சை மீண்டும் வாழக் கண்டேன்
உதவும் கரங்கள் நிறையக் கண்டேன்
பசிப்பிணி எங்கும் நீங்கக் கண்டேன்
கனவே கலையாதே

ஊழல் எங்கும் நீங்கக் கண்டேன்
ஊமைகள் அனைவரும் பேசக் கண்டேன்
சிரித்த முகங்கள் எங்கும் கண்டேன்
சிங்காரச் சென்னை சிரிக்கக் கண்டேன்
கனவே கலையாதே

ஏழ்மை இன்றி வாழ்வோர் கண்டேன்
ஜாதிமத பேதம் நீங்கக் கண்டேன்
கூட்டுக் குடும்ப வாழ்க்கைக் கண்டேன்
குதுகூலமாக வாழக் கண்டேன்
கனவே கலையாதே

யுத்தம் இல்லா உலகம் கண்டேன்
புலால் உண்ணா இந்தியா கண்டேன்
மதுப் பழக்கம் அறவே ஒழியக் கண்டேன்
செல்வம் எங்கும் செழிக்கக் கண்டேன்
கனவே கலையாதே

ஆளுமைத் திறன் ஓங்கக் கண்டேன்
இந்தியா முதலிடம் நிற்கக் கண்டேன்
அனைத்து நாடுகளும் போற்றக் கண்டேன்
வல்லரசு நாடாய் மாறக் கண்டேன்
கனவே கலையாதே

வரதட்சணைக் கொடுமை ஒழியக் கண்டேன்
பெண்டிர் அனைவரும் மகிழக் கண்டேன்
மாதரை மாந்தர் மதிக்கக் கண்டேன்
பாரத அன்னை மகிழக் கண்டேன்

கண்டவை எல்லாம் நனவாகும் வரை ......
கனவே கலையாதே

எழுதியவர் : சுடர் (10-Aug-14, 1:51 pm)
Tanglish : kanave kalaiyaathe
பார்வை : 278

மேலே