சுடர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுடர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  21-Mar-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-May-2012
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  17

என்னைப் பற்றி...

என் பெயர் சீதாராமன். நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. உலக மகா கவிஞன் கண்ணதாசனின் கவிதைகளின் ஈர்ப்பாலும், தமிழின் மீதுள்ள காதலாலும் நானும் கவிதை எழுத ஆரம்பித்தேன்.

என் படைப்புகள்
சுடர் செய்திகள்
சுடர் - எண்ணம் (public)
20-Jul-2017 9:15 pm

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் எழுத்துக்கு வரவு.

மேலும்

சுடர் - யாழினி வளன் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

நிலவையும் பெண்ணையும் ஒப்பிட்டு எத்தனையோ கவிதைகள் வாசித்திருக்கிறோம்.
ஆனால் ஏன் ஒரு ஆண் இது நாள் வரை நிலவோடு கற்பனையில் கைகோர்க்கவில்லை என்று யோசனை தீடீரென வந்ததால் இந்த போட்டி.
ஆண் மகனையும் நிலவையும் ஒப்பிட்டு கவிதைகளை இங்கு பதியுங்கள் நண்பர்களே.
நம் கற்பனை சிறகுகள் இன்று கொஞ்சம் வித்தியாசமாக வேறு திசையில் பறக்கட்டுமே

மேலும்

என் கவிதையை எப்படி சமர்ப்பிப்பது ? 19-Aug-2017 3:23 am
முடிவுகள் என்று அறிவிக்கப்படும் ? 10-Aug-2017 12:24 pm
கவிதை போட்டியின் முடிவை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் தளத்தில் என தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே ... தலைப்பை நான் கூறினாலும் வழக்கமான தேர்ந்தெடுக்கும் முறைகள் இங்கு எப்படி என எனக்கு தெரியாததால் கேட்கிறேன் 04-Aug-2017 8:21 am
Na pannum pothu athu varala . Any way consider this poem for competition. Thanks 02-Aug-2017 11:50 pm
சுடர் - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2014 2:50 pm

காதல் பொதுவானது, கன்னிகள் அல்ல.....!!-வித்யா

கவிஞர்களின்
வர்ணனைகள்எல்லாம்
மோகத்தின் வெளிப்பாடெனில்......

மின்மினியும்வெண்ணிலவும்
தென்றலும் பூவும்
கோடிக்கவிஞனின் கவியால்
கற்பழிக்கப் பட்டிருக்க வேண்டும்.....!!

இல்லையேல்
காதல் பொதுவுடைமை
ஆக்கப்பட்டிருக்கவேண்டும்.......!!

முத்தத்தில் தொடங்கி
முத்தத்தில் முடித்துக்கொள்ளும்
உதடுகளெல்லாம் காதலை
மென்மையாகவே உச்சரிக்கும்..........!!

அவையெல்லாம்
காதல் குருடர்களும்
செவிடர்களும்
இதயங்களை வாணிபம்செய்து
உடல்களை பண்டமாற்றும்
நூதன வியாபாரம்.....!!

எழுதாப் பக்கங்களைப்போல
ஒரு அழகான கவிதை
இருக்குமெனில்
அது காத

மேலும்

எழுதாப் பக்கங்களைப்போல ஒரு அழகான கவிதை இருக்குமெனில் அது காதலாக இருக்கும்....... அதன் கரு....... காதலர்களாக இருப்பார்கள் // அழகு தோழி // 13-Sep-2014 12:59 am
எழுதாப் பக்கங்களைப்போல ஒரு அழகான கவிதை இருக்குமெனில் அது காதலாக இருக்கும்....... அதன் கரு....... காதலர்களாக இருப்பார்கள்.......!! அழகு வித்யா...! 11-Sep-2014 3:45 pm
என்ன உன்னோடு கருப்பொருள் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க..!! இங்கு யாரும் உன்னோட கவிதை நமக்குத்தான் என்று உரிமை கொண்டாட வில்லையே..? ஒரு பெண்ணின் அழகை வர்ணிப்பதே காமமாகி விடுமா..? அப்படி வர்ணிக்க பட்டவர்கள் எல்லாம் ..உன் கூற்று படி கற்பழிக்க பட்டவர்கள் ஆகி விடுவார்களா என்ன..? காமத்தை ..காதலையும் ... வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்றால் அது இரண்டு அனுபவிக்கும் இடத்தில் அவற்றை வேறுபடுத்தி காட்ட வேண்டும்..!! அதை விட்டு கவிஞர்களின் வர்ணனைகள்எல்லாம் மோகத்தின் வெளிப்பாடெனில்...... மின்மினியும்வெண்ணிலவும் தென்றலும் பூவும் கோடிக்கவிஞனின் கவியால் கற்பழிக்கப் பட்டிருக்க வேண்டும்.....!! (இங்கு எங்கு காமம் உள்ளது.. ..? எப்படி கற்பழிக்க பட்டு இருக்கும்..) என்று எழுதி இருப்பது..... குற்றவாளியே இல்லாமல் .அவன் குற்றத்தை விசாரிப்பது உள்ளது..!! காதல் என்ன வெறும் எழுதபடா கவி..என்ன..? எழுத பட்ட கவியும் காதல் தான் எழுத படுகின்ற கவியும் காதல்தான்.. ..அது முக்காலத்துக்கும் பொருந்தும்...!! 10-Sep-2014 10:10 pm
ஒரு கவிஞன் எழுதிய வர்ணனை கவி அவன் யாரை கருப்பொருளாக வைத்து எழுதினானோ அவர்களுக்கு மட்டுமே சொந்தம். கவியை ரசிக்கலாம் கருத்திடலாம். அக்கவிஞனின் வாசகிக்கு கருப்பொருள் அந்தஸ்த்து கொடுத்து அழகு பார்ப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல. ஒரு சிலரின் வாழ்க்கைக்கவிதைகள் நம் வாழ்வோடு ஒன்றி இருக்கலாம். அதற்காக அவர் எழுதியது நமக்குத்தான் என்று உரிமை கொண்டாடிட முடியாது. பெரும்பாலான கவிஞன் இயற்கையை ரசித்தே எழுதுகிறான். அது மோகம். அதுவே ஒரு பெண்ணை வர்ணித்து எழுதினால் அது காமமாகி விடுகிறது. இதையே கூற முற்பட்டிருக்கிறேன். நான் கூற வேண்டியதை என் கவியில் கூறி விட்டேன். 10-Sep-2014 3:48 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2014 12:34 am

ஒடிந்த உள்ளத்தை ஒன்றாய் இணைத்து
>>>>ஒட்டிட முடியுமோ செல்லக் கிளியே ?
இடியாய்த் தாக்கும் துன்பங்கள் தொடர்ந்தால்
>>>>இன்பம் வருமோ செல்லக் கிளியே ??

நொடிக்குள் நூறு சலனங்கள் மனதை
>>>>நொந்திடச் செய்யும் செல்லக் கிளியே !
வடிக்கும் விழிகள் வஞ்சக சூழ்ச்சியால்
>>>>வதனமும் வாடும் செல்லக் கிளியே !!

குடிக்கும் மனிதன் திருந்த மறுத்தால்
>>>>குடும்பம் குலையும் செல்லக் கிளியே !
அடிதடி சண்டை அடிக்கடி நடந்தால்
>>>>அமைதி விடைபெறும் செல்லக் கிளியே !!

பிடித்த வாழ்க்கை அமையா விட்டால்
>>>>பிறவியும் சாபமே செல்லக் கிளியே !
துடிக்கும் இதயம் தன்பணி முடித்தால்
>>>>துக்கமே இல்லத்தில் செல்லக் க

மேலும்

நன்றி ப்ரியா !! 22-Sep-2014 12:37 pm
உண்மை அருமை அம்மா....! 22-Sep-2014 12:23 pm
மிக்க நன்றி நிஷா !! 09-Sep-2014 12:27 pm
மிக்க நன்றி !! 09-Sep-2014 12:26 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Sep-2014 12:26 am

நெடிதுயர் தென்னையும் நீண்டுவளர் பாக்கும்
வடிவான ஆலரசும் வாகாம் - அடிப்பெண்ணே
வேண்டிடும் பக்தருக்கு வேம்பும் கடவுளாம்
மாண்பு மிகுந்த மரம் .

தென்றலாடும் பூமரத்தில் தேன்மலர்கள் சிந்திட
மன்றல் கமழுமே மௌனமாய் - பன்னீர்
தெளித்தே வரவேற்கும், தேன்சிட்டும் பாட
களிப்பால் கிளையசையுங் காண் .

மேலும்

மிக்க நன்றி ப்ரியா !! 22-Sep-2014 12:35 pm
அருமைப்பா அம்மா! 22-Sep-2014 12:24 pm
மிக்க நன்றி சபா ....!! 13-Sep-2014 10:39 am
மிக்க நன்றி ஜின்னா !! 13-Sep-2014 9:53 am
சுடர் - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2014 10:08 am

வருமானவரி கட்டாமல்,"டிமிக்கி' கொடுப்பவர்களை சுட்டுப் பொசுக்கித் தள்ளினால் என்ன?

மேலும்

சாந்தி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை! 28-Aug-2014 12:07 pm
வியாபாரம் செய்யும் உங்கள் மாமனும் மச்சானும் செத்துப் போய்விடுவார்களே! டாக்டராயிருக்கும் உங்கள் சிற்றப்பா பையனை நீங்களே சுட வேண்டியதிருக்கும்; பரவாயில்லையா? ஆடிட்டர்களைத் தண்டித்தால் அர்த்தமுள்ளதாக இருக்கும். வக்கீல்கள் எப்படிச் சட்டத்தின் சந்து பொந்திற்குள் புகுந்து குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்களோ, அப்படியே ஆடிட்டர்களும் வரி ஏய்ப்பிற்குத் துணை போகிறார்கள்! 26-Aug-2014 5:28 pm
உங்களின் ஆலோசனைப்படி நடந்தால் அரசு ஊழியர்களைத் தவிர நிறைய பேர் தண்டனைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அரசு ஊழியர்களிடமிருந்துதான் ஒரு பைசா கூட விடாமல் துல்லியமாக வருமானவரி கணக்கிடப் பட்டு வசூலிக்கப்பட்டும் விடுகிறது. 26-Aug-2014 1:04 pm
சுடர் - சுடர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2014 8:13 am

இனிய இப்பிறவி
இனிதாக முடிந்திட்டு
இனியும் ஒரு பிறவி உண்டென்றால்........
இனிய மகளே.....
இந்த அப்பாவிற்கு
நீயே மகளாக பிறக்கவேண்டும்.

மேலும்

மகள் பாசத்தின் வெளிபாட்டுக்கு நன்றி 13-Nov-2014 8:17 pm
நிலவு மகளுக்கு நன்றி 28-Aug-2014 11:35 am
நன்றி மகளே! 28-Aug-2014 11:35 am
சிறப்பு 25-Aug-2014 10:38 am
சுடர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2014 8:13 am

இனிய இப்பிறவி
இனிதாக முடிந்திட்டு
இனியும் ஒரு பிறவி உண்டென்றால்........
இனிய மகளே.....
இந்த அப்பாவிற்கு
நீயே மகளாக பிறக்கவேண்டும்.

மேலும்

மகள் பாசத்தின் வெளிபாட்டுக்கு நன்றி 13-Nov-2014 8:17 pm
நிலவு மகளுக்கு நன்றி 28-Aug-2014 11:35 am
நன்றி மகளே! 28-Aug-2014 11:35 am
சிறப்பு 25-Aug-2014 10:38 am
சுடர் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2014 1:51 pm

கனவே கலையாதே
நான் காணும் அற்புதக்
கனவே கலையாதே

இந்தியா எங்கும் பசுமையைக் கண்டேன்
அஹிம்சை மீண்டும் வாழக் கண்டேன்
உதவும் கரங்கள் நிறையக் கண்டேன்
பசிப்பிணி எங்கும் நீங்கக் கண்டேன்
கனவே கலையாதே

ஊழல் எங்கும் நீங்கக் கண்டேன்
ஊமைகள் அனைவரும் பேசக் கண்டேன்
சிரித்த முகங்கள் எங்கும் கண்டேன்
சிங்காரச் சென்னை சிரிக்கக் கண்டேன்
கனவே கலையாதே

ஏழ்மை இன்றி வாழ்வோர் கண்டேன்
ஜாதிமத பேதம் நீங்கக் கண்டேன்
கூட்டுக் குடும்ப வாழ்க்கைக் கண்டேன்
குதுகூலமாக வாழக் கண்டேன்

மேலும்

நன்றி தோழமையே 26-Aug-2014 11:46 am
நன்றி மகளே! 10-Aug-2014 11:47 pm
நன்றி நண்பா! 10-Aug-2014 11:38 pm
மெய்ப்படும் காலம் ஒன்று உண்டு! 10-Aug-2014 11:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
மேலே