நிரந்தரமில்லை
உயிர் அது உன்னோடு
உள்ள வரையிலும் தான்
உன் பெயரும் உனக்கு
சொந்தமடா !
இலைகளில் அமர்ந்திருக்கும்
பனித்துளிகளும்
பகலவன் வரும் வரைக்கும் தான்
இலைகளுக்கு
சொந்தமடா !
அன்னையின் கருவறையும்
ஈரைந்து மாதங்கள் தான்
குழந்தைக்கும்
சொந்தமடா !
பலமான கால்கள்
உள்ள வரைதான்
பறவைகளுக்கும்
மரங்கள் சொந்தமடா !