தோல்விகள் தடையல்ல

தோல்விகள் தடையல்ல...
========================
வெற்றியின் முதற்படி தோல்விகளே - மனிதா
தளராதே அனைத்தும் உனக்கு ஏணிகளே
தோல்வியில் கற்பாய் வெற்றி பாடங்களே
உணர்ந்தால் உயர்வாய் உன் வாழ்வினிலே!!!
முன்னேற்றப் பாதையில் தடைகள் வரும்
தடைகளை உடைக்க நல் வழி தோன்றி விடும்
சிறந்த பாதையில் பாதங்கள் ஓடவிடு
எதிர்வரும் இடர்களை எல்லாம் தகர்த்துவிடு!!!
விழுந்திடும்போது நீ அழுவது தள்
விழுதாய் நீயும் நம்பிக்கைக் கொள்
விழுவதெல்லாம் மீண்டும் எழுவதற்கே
எழுந்தால் ஒளிதரும் வாழ்வுனக்கே!!!
அவமானம் கேலிகள் வாழ்வு கண்டிடுமே
அதனை உதறிட வெகுமானங்கள் வந்திடுமே
எடுத்த காரியம் மாறா உறுதி என்றால்
எதிர்காலம் உனக்கே அமையும் நன்றாய்!!!
புயல் போல் தாக்கும் இடர்கள் வரும்
துணிவுடன் எதிர்க்கையில் அமைதி பெறும்
உனை தாக்கும் ஆயுதம் எதிரி என்றால்
பொடிப் பொடியாக்கிடு எதிரியை முடியும் உன்னால்
வெற்றிகொள்வாய் முதலில் உன் மனதை
உன்னடக்கம் ஆக்கிடு அதை விரைவில்
உன்னை நீயே வெற்றி கொண்டால்
உலகினில் உனை வெல்ல எவருமில்லை!!!
தோல்விகள் தடையல்ல நீ அறிவாய் - அவை
வெற்றியின் துவக்கம் நீ உணர்வாய்
துவண்டு சரிதல் என்பதை நீ விலக்கு
தோல்வியை புறந்தள்ள நல் வாழ்வுனக்கு
வாழ்க்கையை வென்றிட பல வழிகளுண்டு
வாழ்ந்திடு நீயும் நன் நெறியில் நின்று
வென்று காட்டலாம் விரைவினில் வா...
துயரங்கள் கொன்று போடலாம் சடுதியில் வா...