ஹைக்கூ கவிதைகளின் சாமூராய் மட்சுவோ பாஷோ

மட்சுவோ பாஷோ ஜப்பானில் கி.பி. 1644 ஆம் ஆண்டளவில், ஈக்கா மாநிலத்தில் உள்ள யுவேனோ என்னும் ஊரில்பிறந்தார். இவர் ஜப்பானில் சீனா-ஜப்பான் மொழிக்கலவையாக இருந்த ‘‘இடோ” காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்.இயற்பெயர் கின்சாக்கு என்பதாகும். மட்சுவோ என்பது குடும்பப் பெயர். பாஷோ என்பது அவருக்குப் பிற் காலத்தில் வந்த பெயர். சோபொ,டோசி என்பன பாஷோவின் செல்லப் பெயர்களாகும். பாஷோ என்றால் வாழை என்று பொருள். டோக்கியோவின் புறநகர்ப் பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் செர்ரி மரங்களுக்கு நடுவே குடில்அமைத்து தங்கியிருந்தார் கி.பி. 1681 ஆம்ஆண்டு பாஷோவின் குடிலுக்கு அருகே நண்பர் ஒருவர் அன்பளிப்பாக வாழையை நட்டார். பாஷோ ஜென் தியானத்தில் நன்கு பயிற்சிப் பெற்றவர் ஆகையால் பாஷோ இரவில் தனிமையில் அதை இரசிப்பார். பெருங்காற்றில் வாழை இலைகள் கிழிபடுவதையும் மென் காற்றில் வாழை இலைகள் அசைந்தாடுவதையும் இரசிப்பார். பாஷோ வாழையோடு ஆன்மீகப் பிணைப்பில் ஈடு பட்டிருந்தாராம். இவர் தந்தையார் சாமூராய் வீரர். சாமூராய் என்றழைக்கப்படும் ஒருவித படைவீரர்கள் வெற்றிப் பெறும்வரை அல்லது எதிரியோடு போராடி தன்னுயிர் பிரியும்வரை போர் செய்வார்கள்.அரசனுக்காக உயிரையும் விடுவார்கள்.வேறுவழியின்றி எதிரியிடம் சிக்கிக் கொண்டால் தங்களுடைய வாளால் தங்கள் வயிற்றைக் கிழித்து வீரமரணம் அடைவார்கள்.இந்நிகழ்வுக்கு ‘‘ஹராஹிரி” என்று பெயர். சிறு வயதிலேயே ‘‘ டோடோயஷித்தாடா ” என்னும் சமையல் கலைஞரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். இவர்தான் பாஷோவுக்கு கலை இலக்கிய ஆன்மீகக் குருவாகத் திகழ்ந்தார்.குருவிடம் இருந்து உணவு சமைக்கவும் கவிதை சமைக்கவும் பாஷோ கற்றுக் கொண்டார்.தொடர்ச்சியான கேள்வி-பதில் பாணியில் பாடப்படும் ‘‘ ஹைக்காய்னொ ரெங்கா ” கவிதைகளையே ஆரம்பக்காலத்தில் அதிகமாக டோடோயஷித்தாடாவும் பாஷோவும் பாடிவந்தார்கள். கி.பி.1662 ஆம்ஆண்டு பாஷோவின் முதல் கவிதைநூல் வெளியானது. கி.பி.1665 ஆம்ஆண்டு டோடோயஷித்தாடாவும் பாஷோவும் இணைந்து 100 பாடல்கள் கொண்ட ரெங்கு கவிதை நூலை வெளியிட்டனர். கி.பி.1666 ஆம்ஆண்டு டோடோயஷித்தாடாவின் திடீர் இறப்பு பாஷோவைப் பெரிதும் கலங்கடித்து விட்டது.பிறகு தங்களுடைய குலத்தொழிலான சாமூராய் வீரராகப் படைகுழுவில் சேராமல் நாடோடியாக வாழ்வியல் உண்மைகளை நன்கு அறிந்துகொள்ள சுற்றுப்பயணத்தைஆரம்பித்தார்.கிராமப்புறவாழ்வைப் பெரிதும் விரும்பினார். கி.பி.1667, 1669, 1671 ஆம் ஆண்டுகளில் கவிதைத் தொகுப்பு நூல்களை பாஷோ வெளியிட்டார். கி.பி.1682 ஆம்ஆண்டு குளிர்காலத்தில் இவரின் குடில் தீக்கிரையானது. கி.பி.1682 ஆம்ஆண்டு இவரின் தாயாரும் இறந்து போனார். கி.பி.1683 ஆம்ஆண்டு இவருக்கு இடோவில் குளிர்காலத்தில் குடிலை நண்பர்கள் கட்டித்தந்தார்கள். ‘‘ கவிஞனுக்குச் சோகம் ஈடில்லாச் சொத்து வேகம் வளர்த்திடும் புலமையின் வித்து ” என்னும் திருச்சிபாரதன்அவர்களின் தீந்தமிழ் வரிகளுக்கு ஏற்ப பாஷோவிற்குத் துக்கம் பெருகினாலும் தாங்கிக் கொண்டார்.மீண்டும் வாழ்வியல் உண்மைகளை நன்கு அறிந்துகொள்ள சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்.ஒகாகி என்னுமிடத்தில் பயணத்தை நிறைவு செய்தார். கி.பி.1694 ஆம்ஆண்டில் கடைசியாக - ‘‘ தொலைதூர நேர்வழிச்சாலை” என்னும் கவிதைத்தொகுப்பு நூலை பாஷோ வெளியிட்டார். கி.பி.1691 ஆம்ஆண்டு இடோவுக்குத் திரும்பினார் ஜீடோய் என்ற பெண்ணோடு இறுதி வாழ்வைக் கழித்தார் ஏராளமான கவிதை ரசிகர்களையும் மாணவர்களையும் பெற்ற பாஷோ கி.பி.1694 ஆம்ஆண்டு நவம்பர் 28 ஆம்நாள் தன்னுடைய 50 வது வயதில் தீராத வயிற்றுக் கோளாறினால் காலமானார்.
மட்சுவோ பாஷோ அவர்கள் உலகளாவிய ஹைக்கூ கவிதைகளின் தந்தை என்னும் பெருமைக்கு உரியவர். உலக அமைதியை வாள் முனையில் எழுதாமல் பேனா முனையில்எழுதியவர்.ஜென் தத்துவத்தை முதன்முதலில் ஹைக்கூ கவிதைகளில் வடித்தவர்.பாஷோவின் கவிதைகளை ஜப்பானில் நினைவுச் சின்னங்களிலும் மரபுசார்ந்த இடங்களிலும் விடுகளிலும் அழகாக எழுதி வைத்துள்ளார்கள்.
ஹைக்கூ எழுதும் தன்னுடைய மாணவர்களுக்குப் பரிந்துரையாக பாஷோ, ‘‘ எழுதும்போது உனக்கும் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழைக்கூட இடைவெளி இருக்கக் கூடாது… உள்மனதோடு நேரடியாகப் பேசு- எண்ணங்களைக் கலைந்து போக விடாதே – நேரடியாகச்சொல் ” என்கிறார். பாஷோவின் புகழ்பெற்ற நூல்கள்:Kai Ōi (The Seashell Game) (1672)Edo Sangin (江戸三吟?) (1678)Inaka no Kuawase (田舎之句合?) (1680)Tōsei Montei Dokugin Nijū Kasen (桃青門弟独吟廿歌仙?) (1680)Tokiwaya no Kuawase (常盤屋句合?) (1680)Minashiguri (虚栗?, "A Shriveled Chestnut") (1683)Nozarashi Kikō (Record of a Weather-Exposed Skeleton) (1684)*Fuyu no Hi (Winter Days) (1684)Haru no Hi (Spring Days) (1686)*Kawazu Awase (Frog Contest) (1686)Kashima Kikō (A Visit to Kashima Shrine) (1687)Oi no Kobumi, or Utatsu Kikō (Record of a Travel-Worn Satchel) (1688)Sarashina Kikō (A Visit to Sarashina Village) (1688)Arano (Wasteland) (1689)*Hisago (The Gourd) (1690)*Sarumino (猿蓑?, "Monkey's Raincoat") (1691)*Saga Nikki (Saga Diary) (1691)Bashō no Utsusu Kotoba (On Transplanting the Banana Tree) (1691)Heikan no Setsu (On Seclusion) (1692)Fukagawa Shū (Fukagawa Anthology)Sumidawara (A Sack of Charcoal) (1694)*Betsuzashiki (The Detached Room) (1694)Oku no Hosomichi (Narrow Road to the Interior) (1694)]Zoku Sarumino (The Monkey's Raincoat, Continued) (1698)** Denotes the title is one of the Seven Major Anthologies of Bashō (Bashō Shichibu Shū)பாஷோவின் புகழ்பெற்ற சில கவிதைகள்:
‘‘ பழைய குளத்தில்/ குதித்தது தவளை/ நீரின் ஓலி ”
‘‘ ஞானிகளின் பாதச்சுவடுகளைப்/ பின்பற்றாதே/ அவர்கள் தேடலைத்தேடுங்கள் ”
‘‘ வார்த்தை விழுந்த பின்/ உதடுகள் உறைந்தன/ முன்பனிக் காற்று “
பாஷோவின் கல்லறையில் எழுதப்பட்ட கடைசி வாழ்வியல் கவிதை:
‘‘ உடல் பயணத்திலிருந்து நழுவுகிறது/ என்கனவுகளும்/ உலர்ந்த புல்லாயின ”
ஜப்பானியக் கவிதை குறித்து சுதேசமித்திரன் பத்திரிகையில் (16-10-1916) பாரதியார் எழுதியக் கட்டுரையில் பாஷோ பற்றியும் குறிப்பு உள்ளது. ‘‘ சமீபத்தில் மார்டன் ரிவியூ என்ற கல்கத்தா பத்திரிகையில் உயானோ நோக்குச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதி இருந்தார். அவர் அதிலே சொல்வதென்ன வென்றால் மேற்குக் கவிதையில் சொல் மிகுதி எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் கவிதையிலே இல்லை. எதுகைச் சத்தம்முதலியவற்றைக் கருதியும் சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பலசொற்களைச் சேர்த்து வெறுமனே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக்கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகம் இருக்கிறது.தம்முடைய மனதிலுள்ள கருத்தை வெளியிடுவதில் மேற்குப் புலவர்கள் கதைகள்எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள். ஜப்பானில் அப்படியில்லை வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது." கூடை கூடையாய்பாட்டெழுதி அச்சிட வேண்டும் " என்று ஒரே ஆவலுடன் எப்பொழுதும் துடித்துக்கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதையெழுதுபவன் கவியன்று. கவிதையேவாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையை கவிதையாகச் செய்தோன். அவனே கவி.புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம் மலர்களின்பேச்சு - இவற்றிலே ஈடுபட்டுப் போய் இயற்கையுடன் ஒன்றாக வாழ்பவனே கவி.கற்று முடிந்து வீட்டுக்குத்திரும்புகையிலே ஒரு சீடன் "பாஷோ மட்சுவோ என்னும்புலவரிடம் மூன்று ரியோ [அதாவது ஏறக்குறைய முப்பது வராகன்] காணிக்கையாகக்கொடுத்தானாம். இவர் ஒரு நாளுமில்லாத புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக்காப்பது தொல்லையாதலால் "வேண்டியதில்லை" என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம். இவருக்கு காகா [kaga] என்ற ஊரில் ஹொகுஷி என்றொரு மாணாக்கர்இருந்தார். இந்த ஹொகுசியின் வீடு தீப் பட்டெரிந்து போய்விட்டது. அந்தச்செய்தியை ஹொகுஷிப் புலவர் தமது குருவாகிய பாஸோ மட்சுவோ புலவருக்குப்பின்வரும் பாட்டில் எழுதி அனுப்பினார் ."தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே !"மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும் பொழுது எத்தனை அமைதியுடன்இருக்கிறதோ அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வருந் துன்பங்களை நோக்குகிறான். வீடு தீப்பட்டெரிந்தது ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்துபோக வில்லையென்ற விஷயத்தை ஹொகுஷி இந்தப் பாடலின் வழியாகத் தெரிவித்தார் ”.
பாஷோவின் ஹைக்கூகவிதைகளில் இயல்புத் தத்துவம் அல்லது இயற்கைத் தத்துவத்தைப் பெரிதும் லியுறுத்தியுள்ளார்.படைப்புகள் அனைத்தும் சொல்லும் பொருளும் எளிமையாக இனிமையாக புதுமையாக உயர்முறைமையில் காணப்படுவதை அனைவரும் உணரலாம். பாஷோவின் கவிதைகளைத் தமிழ்இலக்கியத்தில் குறிப்பாகச் சங்ககாலஇலக்கியத்தோடு ஒப்பிட்டு கவிதைஅழகியலை இரசிக்கலாம். ஜப்பானியர்கள் இயல்பாகவே அழகுணர்ச்சி மிக்கவர்கள். ஏன் எனில் அவா்கள் மொழியே பெரும்பாலும் சித்திர வடிவில் எழுதப்பெறுபவை எனலாம். ஜப்பானிய நாடு தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள குறிஞ்சித்திணையில் உள்ள மலையும் மலை சார்ந்த பகுதியைப் போன்றது. குறிஞ்சித்திணையைப் பெருவாரியாக கவிதைஅழகியல் சார்ந்தே புலவர்கள் பாடியுள்ளார்கள். சங்ககாலஇலக்கியமான அகம்சார்ந்த இலக்கியங்களில் பேசப்படும் பாடலுக்கு உள்ளே காணலாகும் கருத்துக்களுடனும் பொருட்களுடனும் இலக்கியநய ஒப்புவமைகளைக் கூர்ந்துநோக்கும் ‘‘ உள்ளுறை உவமம்”மற்றும் பாடலுக்கு வெளியே காணலாகும் கருத்துக்களுடனும் பொருட்களுடனும் இலக்கியநய ஒப்புவமைகளைக் கூர்ந்துநோக்கும் ‘‘ இறைச்சி” எனப்படும் கவிதைஅழகியலைக் காணஉதவும் உத்திகளைக்கொண்டும் பாஷோவின் ஹைக்கூ கவிதைகளை அளந்தறியலாம்.
எழுத்தாக்கம்- கவிஞர் மா.தாமோதரகண்ணன் அலைபேசி-9442663637

எழுதியவர் : damodarakannan (12-Aug-14, 9:28 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 264

சிறந்த கட்டுரைகள்

மேலே