கற்க கசடற காதலை

காற்று உன்
முகத்தில் பட்டது
நீ சிரிக்கிறாய்
என்ன செய்தி சொல்லியது
உன் காதில் மட்டும்

என் மனதுக்கு
எவ்வளவு வஞ்சனை
என்னையே மறந்து விட்டது

இதயம் சொல்கிறது
நீரும் வேண்டாமாம்
சோரும் வேண்டாமாம்
கேளேன் சங்கதியை
நீ மட்டும் வேண்டுமாம்

பழைய பஞ்சாங்கம்
தாவணி என்று
சுடிதார் அன்பளித்தேன்
மனதுக்கு மகிழ்ச்சி
அந்தோ
கண்களுக்கோ கோபம்

நீரிலே கோலமிட்டாய்
எல்லோரும் சிரிக்க
நான் மட்டும் கூறினேன்
பூக்கோலம் அருமை

கடவுளுக்கு எல்லாமே
தெரிந்திருக்கிறது
நீ என்னை எப்போது
முத்தமிடுவாய்
என்பதை தவிர !

நான்
முத்தம் கொடு முத்தம் கொடு
என்பது
உன் காதில்
வெட்கப்படு வெட்கப்படு
என்று விழுகிறதா என்ன?

எனக்கு நீன்ட நேர
கனவு ஒன்று வந்தது
ஒன்றுமில்லை
உன் புன்னகை முகம்

கற்க கசடற
குறைந்த பட்சம்
காதலையாவது

எழுதியவர் : சின்னா (13-Aug-14, 10:49 am)
பார்வை : 111

மேலே