அன்பே அன்பே
அன்பே அன்பே
அவஸ்தைகளை
அளவில்லாமல்
தந்து.....எங்கே
நீ......ஓடிமறைந்தாய்....?
உன்னைத்
தேடும்
என் உள்ளம்....
எந்நாளும்
உன்வரவை
நாடுதடி.....!
உறங்காத
இரவுகள்.....உனக்கும்
எனக்கும்
அதிகமடி....விழி
மூடாமல்
பழிபோட்டு
நிற்குதடி
என் காதல்......!
ஆசைப்
பட்டு.....நீ
ஓசை
முத்தங்களை
தரும்
போதெல்லாம்.....
பொல்லாத
கோபம்....
பிரித்து
வைத்த
போலி வாழ்க்கை
மீது......!!
முந்தானை
தொட்டு......
முத்தங்களை
பல
இட்டு.....எப்பொழுதும்
உன்னோடு
வாழ.....வாழ்க்கை
தூரம்
போய்
துயரமாச்சுதடி.....!!
ஆறுதல்
யாரார்
சொன்னாலும்
ஆறாதடி.....அல்லும்
பகலும்
அடிமனசில்
வேதனை
ஆறாத
ரணமடி......!!
நாளை
வந்து
சேரும்
குழந்தைக்காக
இன்று
நம்மனம்
குதித்து
விளயாடுதடி.....
பல
குறும்புகள்
செய்யுதடி....!!
அன்பில்
நனைவதும்
அன்பிற்காக
ஏங்குவதும்
சரிபாதிச்
சுகமடி.....ஆனாலும்
என்
ஏக்கங்களைக்
குறைத்துவிடு......
எனதுயிரே......!!