விருதுபெற்ற வைரமுத்து அவர்களுக்கு

மூன்றாம் உலகப்போரை
எழுதுகோலின் கூர்முனையில்
எழுச்சியுடன் நடத்திட்ட
மணிவிழ கண்ட
மனிதநேய படைப்பாளிக்கு
கவி உலக கவிஞர்களால்
கடைந்தெடுத்து தந்த விருது
நமக்கெல்லாம் விருந்து.

மூன்றாம் உலகப்போர் நாவல்
மூன்றாம் தலைமுறைக்கு
மூன்றாவது கண்
நான்காம் தலைமுறைக்கு
நல் வித்து.

கடவுளெனும் விவசாயி
கடன் தொல்லையால் உயிர் விட
உயிர்விட்ட உறவுக்கு
உதவியாய் ஒரு லட்சம் தந்து
தடைபட்ட வாழ்க்கையை
திரண்டோடச்செய்தாயே

புரியாத அப்பாவிக்கும்
புரட்சி இளைஞர்களுக்கும்
புவி வெப்பமாதலை
புரியவைத்தாயே.

உன் எழுதுகோலில் கசிந்த மை
உலக வேளாண் நசிந்ததையும்
புவிவெப்பத்தால் பொசுங்கியதையும்
உலகமயமாதலால் மசித்ததையும்
இயற்கை அதற்காக பசித்ததையும்
உலகுக்கு பறைசாற்றியது.

உழவனுக்கு உத்தி சொல்லி
உலகுக்கு நூல் எழுதி
தமிழுக்கு எருவிட்ட
தமிழ் வைரம் பாய்ந்த
தமிழனுக்கு விருது.

டான் ஸ்ரீ அறிவாரியம்
உங்களுக்கு விருது அளித்ததனால்
படைப்பாளிகளுக்கு இடையில்
நீங்கள் ஒரு “டான்”

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (17-Aug-14, 3:41 pm)
சேர்த்தது : பெ. கோகுலபாலன்
பார்வை : 1440

மேலே