அண்ணன்

அண்ணன் என்றாலும்
இன்னொரு தாய்தான்
நீ எனக்கு???
சில சமயங்களில்
என்னை சிரிக்கவைக்கிறாய்
என் கோவத்தை தணிக்க???
பல சமயங்களில்
என்னை அழவைக்கிறாய்
உன் கோவத்தை தணிக்க???
நான் குடித்த
சீம்பால் ஏனோ
தேனமிழ்தம் ஆனது
உன் எச்சில் பால்
என்பதாலோ ????
அங்கும் இங்கும் அலைகிறேன்
உன் சட்டை அணிந்து
தம்பியாய் எண்ணாமல்
தலையில் கொட்டுகிறாய்????
தாய்மாமன் என
உனை மாற்றி
என் பிள்ளையை
உன் மார்பில்
எட்டி உதைக்க சொல்லி
பழி தீர்ப்பேன் இதற்கு????
பூமாலையும் கணக்கத்தான்
செய்கிறது மணப்பந்தலில்
உன்னை விட்டு பிரிவதால்???
காமும் ஆசையும் இல்லா
உன் விழியில்
கண்ணீர் ஏனோ????
போய் வருகிறேன் அண்ணா
உன் சட்டையோடும்
சேட்டை நினைவுகுளோடும்????

எழுதியவர் : ILAYARANI (18-Aug-14, 4:08 pm)
சேர்த்தது : இளையராணி
Tanglish : annan
பார்வை : 140

மேலே