மழை வாசம்

இரக்கமில்லா மனிதர்கள்
கடைசி சொட்டு காயும்வரை
அழவைத்துக்கொண்டே இருக்கிறார்கள்
வானத்தையும்
கருமேகத்தையும் .......

அத்தனை முறை
அளவில்லாமல் அழுதாலும்
தீர்வதேயில்லை
தென்படாத சோகம் மேகத்திற்கு....

நித்தியமாய் நீ வேண்டுமென்பதற்காகவே
கடல் இன்னும் காயாமல்
காற்றுவாங்கிகொண்டிருக்கிறது ...

இதுவரை எவராலும்
வடிவமைக்கப்படாத வடிகட்டியாய்
உன் வருகை
பூக்களுக்கு
புனிதநீராட்டும் பூவாளியாய்
வியப்பாய் உன் விழுகை....


இப்படி ரசிப்பதற்காகவே
மூச்சுமுட்டியும்
முழித்துக்கொண்டிருக்கிறது
இந்த பூமி.............


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (19-Aug-14, 12:00 pm)
Tanglish : mazhai vaasam
பார்வை : 224

மேலே