பொய் புலவர்கள்

மெய் எழுதும் கவிஞர்கள்
மை வைத்து காத்திருக்கிறார்கள்.

மயில் ஏதும்
மடியில் வீழும்.
தோழி என்றும்
காதலி என்றும்
உறவுக்கொண்டு
பறக்கப்பார்க்கிறது
பொய் மனமுடைய
கவிஞர்களின் புத்தி.

எப்போது பிறந்தார்கள்
அறிவிக்க துணிவில்லை
இவர்கள் கவிஞர்களாம்!

ஏன் மறைக்கவேண்டும்
கவிஞனின் மனதை பாருங்கள்
தெரியும் பித்தலாட்டம்!

இல்லற சுகம்
திருப்தியின்றி
ஊர்மேய்கிறது
அலைபாயும்
அற்பர்களின் மனம்
இதில் ஏமாந்து
மயங்கி சாகிறது
பேதைகளின் மானம்

பேசி மயக்க
ஒரு பெண்
ஊர் சுற்ற
ஒரு பெண்


கவிதைகள் பொய்
அது அழகு
கவிஞர்கள் பொய்
அது அழுக்கு.

பென் பிடித்து எழுதுபவர்களுக்கு
பெண் பித்தம் ஆகாது.

எழுதியவர் : மேகலா (26-Aug-14, 11:58 am)
பார்வை : 133

மேலே