பெருநகர பிளாட்பார்ம்-விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு

பெருநகர பிளாட்பார்ம்-விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு

பெருநகரம்-பஸ் ஸ்டாண்ட் வரை நீளுகிற பிளாட்பார்ம். பிளாட்பாரத்தில் பதினைந்து குடும்பங்கள். குப்பை பொறுக்குவதும், கூட்டங்களில் கலந்து கொள்வதும் தொழில்.

அந்தக் குடும்பங்களின் வாண்டுகளாய் சேர்த்தமைத்தது அகில இந்தியப் பொடியன்கள் சங்கம். சங்கத்தின் உடனடிக் குறிக்கோள் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாய்க் கொண்டாடுவது.

குறிக்கோளுக்கு காரணம்- அவர்கள் பெற்றோர்களின் தவிப்பு

தவிக்கக் காரணம்- வெள்ளை உடை ஆசாமிகளின் வருகையும், மத மாற்றமும்.

மதம் மாறியவர்களும், அதற்கான காரணமும்.

1.இசக்கி முத்து: பஸ் பயணி ஒருவர் தவற விட்ட வாட்சை தெரியாத்தனமாய் இவர் கையிலெடுத்து விட்டார். திருட்டுப் பழியிலிருந்து தப்பிக்க மதம் மாறினார்.
2. வாணி: முதுநிலை பட்டதாரியை மணக்க.
3. சகாயம், மணி, செண்பக ராமன்: துபாயில் வேலை
4. காஞ்சனா: பணக்காரியாக
5. மாரியம்மாள்: வந்து...மகளுக்கு சர்ச் பார்க் கான்வென்டில் சீட் கிடைக்க.
6. குணாளன்: எம்.எல்.ஏ ஆக

இப்படியாக மதம் மாறினாலும் அவர்கள் மனதோ, வாழ்க்கையோ மாறவில்லை. ‘‘எங்க சாமியோட உங்க சாமியும்... ’’ என்பதே அவர்கள் நிலைப்பாடாய் இருந்தது. சமீப காலமாய் ‘‘உங்க சாமியக் கும்பிட்டா நரகம்தான் என்றும் சலுகைகள் கட்’’ என்றும் மிரட்டல்..இப்போது தவிக்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி நெருங்க நெருங்க பசங்களுக்கு விநாயகர் விக்கிரகம் கிடைக்க வில்லை. சாணிப் பிள்ளையாரிலும் மஞ்சப் பிள்ளையாரிலும் யானைத் தலையும், பானைத் தொப்பையும் தெரியவா செய்கிறது?

கடைசியில் பசங்கள் வெ.உ.ஆக்களிடமே போனார்கள். மதம் மாற சம்மதித்தார்கள்.

‘‘உங்களுக்கு என்ன வேணும்? சாக்லெட்டா, சொக்காயா? பணமா? ’’

‘‘பிள்ளையார் சிலை வேணும்’’ பசங்கள் கோரஸாக சொல்ல, வெ.உ.ஆக்கள் முகத்தில் ஈயாடவில்லை.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (28-Aug-14, 4:09 pm)
பார்வை : 124

மேலே