விநாயக சதுர்த்தி
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்
எங்கள் அடிமனதின் ஆஸ்தான கோமகன்
காலம் காலமாய் எங்கள் குலத்தின் காவலன்
ஆய கலைகள் அறுபத்து நான்கின் புரவலன்
விக்னங்கள் களைந்து வழிநடத்தும் தலைமகன்
ஏக தந்தத்தின் மூலம் எமையாளும் இறைமகன்
அவனன்றி எங்களின் ஒரு அணுவும் அசையாது
அவன் புகழ்பாடாமல் எங்களின் ஜீவன் ஓயாது
முச்சந்தி ஆலமரம் என நீக்கமற நிறைந்தபடி
வியாபித்து அருள்செயும் வாதாபியின் கணபதி
சித்திபுத்தி அதிபதி வலம்புரியின் உயிரொலி
வல்வினையை வேரறுத்து காத்தருளும் கணபதி
பிள்ளையார்பட்டி பெருமானே சரணம் சரணம்
மலைகோட்டை மன்னவனே சரணம் சரணம்
வெற்றி விநாயக பெருமானே சரணம் சரணம்
பிரணவத்தின் பொருளானவனே சரணம் சரணம்