முதல் தோழி
என்னில் நுழைந்த,
முதல் காற்று..
என்னில் பதிந்த,
முதல் உருவம்...
என்னில் இனித்த,
முதல் முத்தம்..
என்னில் வார்த்த,
முதல் நிழலும்...
என்னில் பூத்த,
முதல் தோழியும்..
நீ... என் அம்மா...