என்னை நனைத்த மழைத் துளி

அன்னையின் முதல் முத்தம்
கன்னத்தில் வீழ்ந்தது
மழையின் முதல் துளி !

நினையாமல் நனைந்ததால்
நினைவுக்கு வந்தது
நான் இழந்த இன்பங்கள் !

நான் அறியா நறுமணம் எப்படி என் துண்டில் !
நனைந்து சென்ற என்னை அனைத்து
தலை துவட்டினாள் அன்னை !

கட்டிலில் கிடந்தேன்
காய்ச்சலில் சுகமாய்
சூழ்ந்திருந்தது சுற்றம் என்னை !

உடல்நலக் குறைவு
நிறைவாக்கித் தந்தது என்
உடன்பிறப்பை எனக்கு !

முதல் முறை அமிர்தம்
உண்டேன் அவன் கையில்
கசாயம் !

இப்பொழுதும்கூட சண்டை
பிடிக்கிறான் என்னை
சாப்பிடச் சொல்லி !

என்ன அவசரம் இந்த காய்ச்சலுக்கு !
இருந்துவிட்டு போகக்கூடாதா
இன்னும் நான்கு நாட்களுக்கு !

ஆசையாய் இருக்கிறது எனக்கு
உன்னில் கரைய
அடுத்து எப்பொழுது வருவாயோ !

உன்னையே நினைத்திக் கொண்டிருக்கிறேன்
மறவாமல் நனைத்துவிட்டுப் போ
மழையே மறுமுறை வரும்போது என்னை !

எழுதியவர் : முகில் (30-Aug-14, 11:14 pm)
பார்வை : 576

மேலே