தீர்த்து விடு

சொர்க்கத்தில் ஒரு கடிதம்
அதில் பெண்ணே
உன் கல்யாண நாட்கள்
இங்கு அடித்து அடித்து
எழுதப்படுகிறது
நீ-ரொக்கத்தை
அதிகமாக்க முயற்சி செய்
அன்றாவது -இங்கு
அடிக்கப்படும் தேதி
நிறுத்தப்படுமா என்று
பார்ப்போம் !
இங்கு காகிதமும்
பேனாவில் மையும்
தீர்ந்து விடும் முன்னே
நீ ரொக்கத்தின்
கணக்கை தீர்த்து விடு
இல்லையெனில்
சொர்க்கத்தில் நிச்சயிக்க
இடமும் மையும்
இல்லாமல் போய்விடும் !

எழுதியவர் : பந்தார்விரலி (30-Aug-14, 8:21 pm)
Tanglish : thiirththu vidu
பார்வை : 84

மேலே