ஒரு பூவின் துளிர்விடும் வலிகள்

சிலுவையை சுமப்பினும் உயிர் இருக்கிறதே ,,
நடக்கும் பலம் உள்ளவரை நடப்பேன்,,,
என்று முடியுமோ ,, அது இலையுதிர்க்காலங்களின்
ஒரு காற்றுவீசிய வேளையில் ஆகட்டும்,,,,
சுமைகளோடே என்னை காற்றுத் தள்ளிய
சருகுகள் மூடிவிடட்டும்,,,
அகால சூரியனின் உக்கிர வேளையொன்றில் ,,,
எரிந்து சாம்பலாகட்டும் ,,
தெரியாமல் செய்த தீட்டுகள் அதிலேயே கருகிடட்டும் ,,
என் சுமை உண்மை என்றால் இது நிறைவேறட்டும்,,,
மீண்டும் ஒரு சூரியனாக பிறந்தால்,,
யார் மனதும் வெதுமையுறும் வண்ணம்,,,
இதமளிக்கவேண்டும் என்ற,, வரமொன்றை
தேடி செல்லுகையில் இவைகள் நிகழட்டும் ,,
ஆம் ஏன் எனில் ஒரு அஸ்தமனத்தில் ஆதவன் மரிப்பதில்லை ,,,
அனுசரன்