எண்ணத்தின் எழுச்சி

நீல வானம்
மரத்தின் நிழலடியில் நான் !
கருத்த மேகக்கூட்டம்
கரைந்துவிழும் மழைத்துளிகள் !
கைநீட்டி வரவேற்கும்
காட்சிப் பேழையாய் நான்!

எழில்மிகு வானவில்
என்முன்னே எழுந்திட !
என்னுள்ளும் எழுகிறது
எண்ணற்ற கனவுகள் !
கூடவே பயமும் எழுகின்றது
வாழ்வே கனவாகிடுமோ என்று !

மழையின் தூறல் நின்றன
மேகங்களும் கலைந்தன !
அடர்ந்த இருள் விலகியது
பகலவன் மீண்டும் பொலிவுற்றான்!
என்னுள்ளும் பிறந்தது
வாழ்வில்புது நம்பிக்கை!

தூறல் நின்று விட்டது
அதன் காட்சி மறையவில்லை !
வேறு வடிவமெடுத்தது
புல்லின் மேல் பனித்துளியாய் !
நம்பிக்கை பெருகி
புது மனபலம் பிறந்தது !

மீண்டுவிட்டேன் நான்
மனக்குழப்பத்தின் பிடியிலிருந்து !
துணிந்து எழுந்துவிட்டேன்
எதையும்இனி எதிர்கொள்வதென்று !
நிச்சயம் பதித்துவிடுவேன்
நாளைய வரலாற்றில் என் வருகையை !

படைப்பு :
நா.அன்பரசன்.....

எழுதியவர் : நா.அன்பரசன்.. (2-Sep-14, 5:59 pm)
Tanglish : ennaththin ezuchi
பார்வை : 78

மேலே