செத்து போன காதல்
செத்து போன காதல் ...!
காதல் என்ற பள்ளியிலே -நான்
கற்று கொண்ட பாடமடி
நெஞ்ச்சுக்குள்ள நிக்குதடி -உன்
நினைவு தன்னை கொட்டுதடி ..
பாசமுடன் ஓடி வந்து
பைங்கிளியே சொன்ன மொழி
இன்றுவரை கேட்குதடி -என்
இதயமது பேசுதடி ...
குத்தும் மார்பை
நெஞ்சில் வைத்து -நீ
செய்த குறும்புகளோ
சாகவில்லை நெஞ்சிலடி
சத்தியமா நம்பிடடி ..
ஆள் மறைக்கும் வாய்க்கால் உள்ளே
அன்று நம்ம செய்தவைகள்
இன்றுவரை இனிக்குதடி - நீ
இன்னும் எனக்கு வேணுமடி ...
மாதம் ஒன்று வரும் வரையும் -உன்
மனசடிச்ச பட படப்பு
இன்று வரை நினைவிருக்கு
இதயமதில் சுகமிருக்கு ....
பால் பட்ட யுத்தம்வந்து
பாதியில் பிரிச்சதுவே
நீ வேறு நான் வேறாய்
திசை மாறி போனமே ...
இன்று அதை நினைச்சா
ஈர் விழியில் அழுகை வரும்
அழுது புலம்பி என்ன
வாலிபம் செத்திருச்சே ...!
வன்னி மைந்தன்
லண்டன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
