ஓர் எழுத்தாளனின் கதை- இதுவரை - V- --சந்தோஷ்

இதுவரை.. 05
------------------------------


எழுதிய கவிதையில் சில சொற்கள் சிந்தனைக்கு வசப்படாத காரணத்தால் தினகரன் தன் பேனாவால் தன் தலையில் குத்திக்கொண்டுதாலும்,
இரத்தம் அதிகம் வெளியேறியதாலும், அதிக ஆக்ரோஷத்திலும் தினகரனுக்கு மயக்கம் ஏற்பட்டு உட்கார்ந்த நிலையிலேயே சரிந்து விழுந்தான். இந்த சூழ்நிலையில் காவியா பதற்றம் அடைந்தாலும் தன் மனதை சாந்தப்படுத்தி விட்டு மனநல மருத்துவர் சொன்ன அறிவுரையை பின்பற்றினாள்.

தினகரனின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தாள். தன் கைக்குட்டையால் தினகரனின் தலையில் மேலும் இரத்தம் வராமல் கட்டுப்போட்டு...

“ தினா..! எழுந்திரு....! கேண்டீனுக்கு போயி காபி குடிச்சுட்டு வரலாம் வா “

“காவி. நான் ஏன் இப்படி நடந்துகிட்டேன். ?.இப்படி நான் ஏன் எமோஷனல் ஆகணும்.? இது ஜஸ்ட் கவிதையா நான் நினைச்சு எழுதி இருந்தா இப்படி ஆகியிருக்காதா ? ஏன் காவி.. சம்திங் ராங் டா.. சாரிடா குட்டிம்மா... “ என்று தினகரன் தன்னையே சுய ஆராய்ச்சி செய்வதை போல உளறிக்கொண்டிருக்க..
காவியா அதை எதுவும் பெரிதாய் பொருட்படுத்தாத போல நடித்தாலும்.. தினகரன் முதன்முறையாக சொன்ன “ குட்டிம்மா” சொல்லில் உருகிப்போனாள்.

“ ஒகே.. தினா..பேசினது போதும் எழுந்திரு.. எனக்கு டையர்ட்டா இருக்கு.. காபி வாங்கி கொடுடா “

“ என்ன காவி.எனக்கு இவ்வளவு பிளட் வந்திருக்கு. எனக்குதான் டையர்டா இருக்கணும். உனக்கு என்ன ? . என்னை ஹாஸ்பிட்டல் கூப்பிடாம கேண்டீனுக்கு கூப்பிடுற. அதுவும் என்னையே காபி வாங்கி கொடுக்க கேட்கறீயே?
இப்போ நீ ஏன் இப்படி பிகேவ் பண்ற காவி..? என்னை இப்படி இன்சல்ட் பண்றது மாதிரி ஏன் நடந்துக்குற? “

“ எதுடா.. இன்சல்ட்..? உனக்கு மைண்ட் கண்ட்ரோல் பண்ண தெரியல. கவிதை எழுதும் போது திங்கிங் லாக் ஆச்சுன்னா கத்தி எடுத்து கழுத்துல குத்திப்பீயா..? கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா உனக்கு.. நீ எப்படி சைக்காலாஜி படிக்க வந்தீயோ...?.. தினா இதுதான் லாஸ்ட்.. இனி இப்படி அட்வைஸ் பண்ணிட்டு இருக்க மாட்டேன்.
இத கேளு..
***- பார்டர்ல சோல்ஜர் எனிமி கிட்ட சண்டை போடும் போது ஆக்ரோஷமா இருப்பான். ஆனா அவன் மைண்ட் கண்ட்ரோல்லா இருக்கும். எப்படி அடிச்சா எதிரி சாவான். அவன் தன்னை எப்படி காப்பாத்திக்கணும்ன்னு எல்லா பிளானும் ஜஸ்ட் ஒரு செகண்ட்ல அவன் மூளை யோசிக்கும்.அதுவும் போர் நடக்குற...அந்த இடத்தில...சுத்தியும் பீரங்கி சத்தம், கூட இருக்கிறவங்க அடிப்பட்டு செத்துட்டு இருப்பதை பார்க்கும் அந்த எமோஷனல் டைம்ல அவன் கண்ட்ரோலா யோச்னை பண்ணுவான் . பண்ணனும்.. அப்படி பண்றவன் தான் வீரன். அதுதான் வீரம் -***

இதெல்ல்லாம் உன்கிட்ட நான் சொல்வது வேஸ்ட்டா... நீ ஒரு கோழை. அந்த சோல்ஜர் நிலைமை கூட உனக்கு இல்ல.ஆனா பெரிய எமோஷனல் வந்த மாதிரி பிகேவ் பண்ணி இப்படி சாகுற.... அடச்சீ....!
உடம்பு பலமா இருப்பது மட்டும் இல்லடா, மனசும் பலமா இருக்கணும். அதுதான் வீரனுக்கு அழகு. இப்ப பாரு ஜஸ்ட் ஒரு கவிதை.. ஏதோ ஆக்ரோஷமா எழுதுற ஓகே .. நல்ல விஷயம் தான்..
== வாள் முனையில ஜெயிக்காத விஷயத்தை ஒரு பேனா முனையில எழுதி ஜெயிக்கலாம் ==
அதுக்காக உன் மூளையை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம இப்படியா பிகேவ் பண்ணுவ..?.....”
…………………………………………………………………………………..
தினகரன் காவியா தன்னை தவறாக கருதிக்கொண்டதாக நினைத்து குறுக்கிட்டு
“ ஸ்டாப் இட் காவி........ நான் கோழையா..?.! எனக்கே ஏன் இப்படி பண்றேன்னு தெரியலன்னு தானே சொல்றேன். அப்போ அப்போ இப்படி எமோஷனல் ஆகும் போது என் கண்ட்ரோல் என்கிட்ட இல்லாத மாதிரி பீல் பண்ணிட்டு இருக்கேன். பட் நீ எதையோ ஸ்கோப் பண்ணி என்கிட்ட பேசுற காவி... .. கம் ஆன்.. சொல்லு எனக்கு என்ன ப்ராப்ளம் ? நீயும் சரி .என் அப்பாவும் சரி.. கொஞ்ச நாளா என்கிட்ட பழகுற ஸ்டைல் வேற மாதிரி இருக்கு, நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன். “ தினகரன் தன்னை , தன் நிலையை தானே உணர ஆரம்பிக்கிறான் என்பது காவியாவிற்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனாலும் அவன் நோய் பற்றி அவன்கிட்ட சொல்லக்கூடாது என்று மருத்துவர் அறிவுறுத்தி இருப்பதால் , காவியாவும் எதுவும் சொல்ல தயங்கினாள்.

“ தினா... பார்த்தீயா இப்படித்தான் நீ கற்பனையா நினைச்சிக்கிற.. இதுக்கூட உன் வீக்னஸ் தான் டா.... யாரு என்ன எப்படி நம்மளை நினைக்கிறாங்கன்னு யோசிக்க ஆரம்பிக்கிறதே தப்பு. அதுதான் தாழ்வு மனப்பான்மை வர வைக்கும். சரி நான் சொன்னது .. எதுக்குன்னு உனக்கு புரியலையா... இப்படி கவித எழுதும்போதே உன்னை நீ டிஸ்டர்ப் பண்ணிக்கிறீயே.. இன்னும் இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ எமோஷனல்ஸ் இருக்கு. அப்போ நீ எப்படி ஹேண்டில் பண்ணுவ... ? அதுக்குதான் உனக்கு அட்வைஸ் பண்ணினேன்..”

“ காவி.. நான் ஒன்னு கேட்பேன். நீ ஏன் என்மேல இவ்வளவு அக்கறையா எடுக்குற..? என் கவிதைதானே உனக்கு பிடிக்கும் ? பட்… “
குறுக்கிட்ட காவியா
“லூசு.. நான் உன் ப்ரெண்ட்டு டா.. கவிதை வச்சி உன்கிட்ட பழக ஆரம்பிச்சேன்னு உண்மைதான்.. ஆனா திங்க் பண்ணி பாரு.. பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்கிட்ட நான் ரொம்ப கிளோஸ் ஆனது.. எப்போ .. ஸ்டேஜ்ல நீ அசிங்கப்பட்டு எமோஷனல் ஆனியே அப்போதானே...! சோ உன் மேல எனக்கே தெரியாம எதோ ஒண்ணு... இருக்கு.. “

“ ஏதோ ஒண்ணுன்னா.....? என்ன அது.....? “

“ ம்ம்ம் இந்த கேள்விக்கு மட்டும் குறைச்சல் இல்ல.... ஒண்ணு இருக்கு அது என்னான்னு எனக்கு புரியல... இப்படி இரத்தம் வந்து ரணகளமான நேரத்திலும் இந்த டாபிக் தேவையா.. எழுந்திரு.... காபி சாப்பிடலாம் அப்புறம் கவிதை சாப்பிடலாம்.. ....ஸ்ஸ்ஸ்சாரி கவிதை எழுது. இன்னிக்கு கவிதை எழுதி முடிச்சு ஆகணும் டா. டோண்ட் வேஸ்ட் டைம். கம் ஆன் டா “ காவியா , தினகரனை மீண்டும் சிந்திக்க தூண்டுகிறாள். இம்முறை தினகரனின் நடவடிக்கையில் ஓரளவு மாற்றம் காணப்படும் என்று நம்பினாள் காவியா.

தினகரனும் காவியாவும் கல்லூரி கேண்டீனில் காபி அருந்திவிட்டு, அங்கிருக்கும் பூங்காவில் அமர்ந்து மீனவர் பிரச்சினைக்காக அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு வாசிக்க வேண்டிய கவிதையை தயார்ப்படுத்துகின்றனர்.
மீண்டும் தினகரனின் மூளைக்கு ஒரு சவால் காத்துக்கொண்டிருந்தது. இம்முறை தினகரன் அவனுக்குள் இருக்கும் நோயினை எதிர்த்து செயல்படுவானா...? காவியாவின் கேள்வி இப்போது எந்த ஆனந்த தருணத்தையோ , அதிர்ச்சியையோ எதிர்நோக்கி இருக்கிறது.
மீண்டும் தினகரனுக்குள் இருக்கும் ஆவேச உணர்ச்சி எனும் ”புலி” சீறி எழுந்து சிந்தனையை வேட்டையாட ஆரம்பிக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------
எதுவும் , எந்த வியாதியும் குணமாக நம் மனமும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குணப்படுத்த முடியாத சில விசித்திர நோய்களையும் ஆழ் மனதில் இருந்து எழும்பும் நம்பிக்கையால் எதையும் எந்த சூழ்நிலையும் எதிர்க்கொள்ள முடியும் என்பது உளவியல் ஆராய்ச்சி கூறும் நல் அறிவுரை.
ஆனால் நாம் சராசரிக்கும் கீழ்படியான நிலையிலே நம்மை நாம் கட்டுப்படுத்திக்கொள்கிறோம். மூளையின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த தெரிந்த வல்லவர்களே இந்த உலகில் ஒரு பெரிய மாற்றத்தினையும் பெரிய புரட்சியையும் ஏற்படுத்துவார்கள், ஏற்படுத்தினார்கள் என்பதே உண்மை. புரட்சியாளர்களும் ,சரித்திர நாயகர்களும்,சிந்தனை சீர்திருத்தவாதிகளும் இப்படிதான் மூளையை பயன்படுத்தி , மூளையை கட்டுப்படுத்தி சாதித்தவர்கள் என்பதற்கு மாற்று கருத்து எவரும் சொல்லிட முடியாது என்று சவால் விட்டே சொல்லமுடியும் தானே ?!!!

இதில் தினகரன் எந்த வகை.. ? காவியா அவனை புரட்சிக்கர சிந்தனையாளனாக மாற்றிடுவாளா?

கேள்விகளும் கேள்வி குறியும் எப்போதும் ஆச்சரியங்களையும், வினோதங்களையும் , சில நேரம் அதிர்ச்சிகளையும் தன்னுள் ஒளித்துக்கொண்டு நம்மிடம் விடைகளை கேட்கும். மனித மூளைக்குள் ஒளிந்திருக்கும் இதுப்போன்ற கேள்விக்கான விடைகளை நாம் தான் சரியான விதத்தில் நமது அனுபவம் வாங்கிய விடயங்களின் மூலம் எடுக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------

சற்று நேரத்திற்கு பிறகு...!

தினகரன் கவிதை எழுத
எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த காவியா , தினகரன் எழுதுவதை கவனித்துக்கொண்டிருந்தாள் என்பதை விட அவனையே , அவனின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள் அவனின் மேல் இருக்கும் ஈர்ப்பால்.. தன் பெண்மையின் உணர்வால் இவளின் மூளைக்குள்ளும் ஓர் இராசாயன மாற்றம் ஏற்பட்டது.

தினகரன் எழுதுவது ஓர் ஆக்ரோஷ கவிதை. காவியாவின் மனதில் எழுதப்படுகிறது காதல் கவிதை. இது இரு வேறுப்பட்ட நிகழ்வுகள் முத்தமிடும் நேரம். எப்படி, எந்த நேரத்தில் இவளுக்கு அவன் மீதான காதல் உண்டானது என்பது காவியாவிற்கே புரியவில்லை.
** இந்த உலகில் உண்மையாய் காதலிக்கும் அனைத்து பெண்களுக்கும் இப்படித்தான் புரியாமல் இருப்பார்கள், இருந்திருப்பார்கள். **

”தினா...! கவிதை இதுவரை எப்படி எழுதியிருக்க. உனக்கு திருப்தியா இருக்கா? “ காவியா
“ ஏன் உனக்கு திருப்தியா இருக்க வேண்டாமா? கொஞ்சம் வெயிட் பண்ணு. இன்னும் கொஞ்சம் எழுதணும்.”
“ டேய்,, கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ் பண்ணிக்கோ...! அப்புறம் எழுதலாம் “
“ இல்ல விட்டா அப்புறம் இதே ஸ்பீடு, இதே திங்கிங் மாறி போயிடும்.. ஈழத்து பிரச்சினை பற்றி இரண்டு வரி எழுதணும். அதைதான் நான் ஆக்ரோஷமா எழுதணும் காவி.” என்றவனின் அருகில் வந்த காவியா அவனிடம் மிக நெருக்கமாக, மிக மிக நெருக்கமாக காற்றுப்புகா இடைவெளி நெருக்கத்தோடு அவனின் தோள் மீது தன் கைப்போட்டு... ஓர் இனம்புரியா பாசத்துடன் அவன் எழுதும் தாளை பார்க்கிறாள். இதை கவனித்த தினகரன்

“ ஹே என்ன இது ?இப்படி பார்க்கிற..! புதுசா தோள் மேல கையப்போடுற,, . என் மேல தீடீர்ன்னு பாசமா? “

“ம்ம் பாசம்தான்..பாசத்துக்கு இன்னொரு பேரு என்ன தினா? “

”காவி......! கவிதை எழுதிட்டு இருக்கிறேன். இப்போ இந்த கேள்வி தேவையா? டிஸ்டர்ப் பண்ணாதேன்னு சொன்னா நீ என்னை மெண்டலி ஸ்டராங்கா இல்லன்னு பெரிய லெட்சர் எடுப்ப.. ம்ம்ம் . காவி ப்ளீஸ்ம்மா நீ கையை எடு.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு”

“ ஆமா நான் அப்படித்தான் பேசுவேன். அப்படித்தான் கையை போடுவேன். ஏன் இப்படி உன் கன்னத்துல முத்தம் கூட கொடுப்பேன்” என்றவள் தினகரனின் கன்னத்தில் தன் முதல் காதல் உணர்வை பதித்தாள். இதை சற்றும் எதிர்பாராத தினகரன் மிரண்டு காவியாவின் கண்களை பார்த்தான், காவியாவின் கண்ணில் புது வசீகரம் ஒன்று தினகரனுக்கு தென்பட்டது. மெலிதாக அவள் சிரிக்க, மெல்லமாக தினகரனின் மூளைக்குள் காதல் ஏறியது.


பொதுவாகவே இந்த உலகில் காதலர்களுக்கு காதல் உறுதியாகும் தருணத்தில் ..

இந்த உயிர்
இன்றியமையாதது
என்று அப்போதுதான் புலப்படும்
இந்த ஜென்மத்தின்
பயன்கள் உணர்ந்து
அகராதியில் புது அர்த்தப்படும்.

கவிப்பேரரசுவின்
”காதலித்துப்பார்” கவிதை
காதல் மந்திரமாகும்.
எழுதுகோலில்
”ஹார்மோன்” மைகள்
புகுந்து புதுக்கவிதையாகும்.



ஓருதலையாக காதலித்த காவியாவே தானாக முன்வந்து அவனை காதலிப்பதாக உணர்த்திய முத்த நிமிடங்கள் தினகரனின் இரத்தம், நாடி, நரம்பு, தசை,சதை, புத்தி என எல்லாவற்றிலும் புது மின்னல் உணர்ச்சிகள் ஏறி மூளையில் தமிழகத்தில் காணாமல் போன மொத்த மின்சார சக்தியும் ஏறியது போன்ற உணர்வு அவனுக்கு உண்டாக்கியது. இந்த நேரத்தில் அவன் எப்படி மூளையை கட்டுப்படுத்த போகிறான். காவியா தேவையில்லாமல் அவனை தூண்டிவிட்டு அவனுக்கு மற்றொரு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி விட்டாளோ?

காவியா செய்தது மிகவும் புத்தசாலித்தனமான செயல்தான் என்பதை தினகரனே உணர்த்தினான்.

“ காவி...! என்னமோ தெரியலே நீ கிஸ் கொடுத்த உடனே என் மனசுல ஒரு பெக்கியூலர் ஃபீல் ஆச்சு. சம்திங் ஏதோ தெரியல... இந்த ஃபீலிங் என்னை கட்டுப்படுத்திக்க முடியாது. ஆனாலும் நீ கிஸ் கொடுத்த முன்னாடி செகண்ட் நான் எப்படி ஆக்ரோஷமா இருந்தேனோ.. அப்படியே இருக்கணும். ப்ளீஸ் நீ இந்த இடத்தை விட்டு போ..!
நாளைக்கு மீட் பண்ணலாம். எனக்கு ஹார்ட் பக் பக் பக்க்னு என்னமோ செய்யுது காவி...” என்று தினகரன் சொன்ன பிறகுதான் காவியா தன் தவறை உணர்ந்தாள் . அவன் இருக்கிற நிலைமையில தேவையில்லாத உணர்ச்சியை, தேவையில்லாம தூண்டி விட்டனே என்று பயப்பட ஆரம்பித்தாள்.

“ தினா... நான் ஜஸ்ட் சும்மாதான் கிஸ் பண்ணினேன். சின்ன குழந்தைக்கு கொடுப்பாங்ளே.. அப்படி.. என் மனசுல வேற ஒண்ணும் இல்லடா.. உன் மனசை குழப்பிக்காதே..! டைம் ஆச்சு.. கவிதை எழுது.. ! நான் ஒரு கிறுக்கி உன் மூட் மாத்தி விட்டேன். “ என்று உளறிய காவியாவின் பேச்சை கேட்ட தினகரன்...

“ காவி.. ஐ ம் ஆல்சோ சைக்காலஜி ஸ்டூடண்ட்.. ! சரி விடு..! பொய் பேசாதே...”
“ டேய் ச்சீ.. அதெல்லாம் இல்ல , நான் சும்மாதான் கிஸ் பண்ணினேன் . ஏன் ஒரு பொண்ணு ஒரு பையனுக்கு கிஸ் கொடுத்தா அது தப்பா நினைக்கிற. ஃப்ரெண்ட்ஷிப்பா இருந்தாலும் அன்பு இருந்தா முத்தம் கொடுக்கலாம் “ என்று புரட்சிகரமாக புதுசாக உளறினாள்.

“ ஓகே லீவ் ட் காவி..! ஐ ம் ஓகே.. சரி கொஞ்சம் வெயிட் பண்ணு..! கவிதை எழுதி முடிச்சிடுறேன். “ தினகரன் முழுவதுமாய் பக்குவமடைந்து தன் நோயை தானே குணப்படுத்த முயற்சிக்க ஆரம்பித்தான்.

ஒரு போராட்டத்திற்கான கவிதையை எழுதும்போது ஆக்ரோஷமான சிந்தனைக்கு இடையில் காதல் பூத்த புதிய உற்சாக உணர்வோடு தினகரனின் எழுத்து புதிய உச்சத்தையும் புதிய எழுச்சியையும் பெற்றது. பரிப்பூரண திருப்தியுடன் கவிதை எழுதிவிட்டு காவியாவிடம் காட்டினான்.

“ காவி..! இந்தா இப்போ படிச்சு பாரு.....! “

வாங்கி படித்தாள், ஆச்சரியத்திலும் , தினகரனின் எழுத்தின் புதிய பரிணாமத்தையும் கண்டு அவள் கயல் கண்கள் அகலமாக விரிந்தன.
“ தினா................... உன் கையை கொடு.....”
கைக்குலுக்குவாள் என்று எதார்த்தமாக தன் கையை கொடுத்தான் தினகரன்.

ஆனால் காவியா தினகரனின் கையை தன் மார்போடு அணைத்து கட்டிக்கொண்டாள்.

“ தினா.......! நீ கவிஞன் டா... ஜான்சே இல்ல...” என்று மீண்டும் அவனின் கைகளை இறுக மார்போடு கட்டிக்கொண்டாள்.

பனிக்கட்டி உலக்கை
பஞ்சுபொதியில் மோதி
மோக தீ
ஏற்றிக்கொண்டதோ...?!!

தினா ஏதோ புதுமையாக உணர்தவனாய் .. “ காவி.. கையை விடு. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. விடுடா காவி.....”

“ என்ன மாதிரி இருந்தா என்னடா.. இது என் ரசனையின் உணர்ச்சி....”

“ காவி... இப்போ நாம் இருப்பது காலேஜ் கேம்பஸ்... புரிஞ்சுக்கோ...! “ என்ற சொன்ன போதுதான் காவியா தன் இயல்புநிலைக்கு திரும்பி.. தீடிரென தினகரனின் கையை உதறிவிட்டாள்.

தினகரன் - காவியா என்ற சிநேகத பறவைகள் இப்போது காதல் பறவையாக உருமாறிக்கொண்டிருந்த தருணம் அது.

-------------------------------------------------------------------------

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்துப்படுவதையும் இதில் மத்திய அரசின் அலட்சிய போக்கினையும் கண்டித்தும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர் அமைப்பினர் நடத்தும் போராட்ட நாள் வந்தது. போராட்டத்தின் இறுதியில் தினகரனின் கவிதையை காவியா வாசிக்க போகிறாள்.
-------------------------------------------------------------------------
கவிதையின் உட்கருத்து “ தனி தமிழ்நாடு “ கோரிக்கை உள்ளடக்கியது என்பதால் ” இந்திய இறையாண்மை சட்டம் எனும் இரும்புகரம் மாணவ அமைப்பினரை என்ன செய்யும் ? தினகரன் - காவியா சந்திக்கும் உச்சக்கட்ட பிரச்சினையால் தினகரனின் எழுத்து பயணம் என்னவாகும் ?

-(தொடரும்)


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (8-Sep-14, 8:35 pm)
பார்வை : 238

மேலே