விடியல் விடியட்டும்

விடியல் விடியட்டும்.

ஏதோ ஒன்று எண்ணுகிறேன்.
ஏதோ ஒன்று பண்ணுகிறேன்.
தோதாய் வரும் சொற்களுடன்.
சாதகம் பழகி பேசுகிறேன்.

பொழுதைப் போக்க எழுதுகிறேன்.
பொழுதைத் தேடி உலவுகிறேன்.
பொழுது முடிந்து போகுமுன்
பொழுது விடிந்திடப் பாடுகிறேன்.

அவசரம் கருதி ஓடுகிறேன்/
அவசியம் உறுதி நாடுகிறேன்.
அபசுரம் திருந்த வேண்டுகிறேன்.
இகசுகம் பொருந்த தூண்டுகிறேன்.

உயிர்களை நான் நேசிக்கிறேன்.
உணர்வுகளைத் தான் வாசிக்கிறேன்.
மனங்களை நான் யாசிக்கிறேன்.
மனிதரைத் தான் யோசிக்கிறேன்.

ஆதி மூலம் ஆய்கிறேன்.
ஆய்ந்து தூலம் ஓய்கிறேன்
நாதிப் பாலம் சேர்கிறேன்.
பேதம் கோலம் தேர்கிறேன்.

எழுதிச் சொல்லிப் பாடுகிறேன்.
இதயம் சொல்ல ஆடுகிறேன்.
மனிதம் சொல்லக் கூடுகிறேன்.
மறைகள் சொல்லைத் தேடுகிறேன்.

விடியல் விடியத்தான் நோக்குகிறேன்.
படியல் வடியத்தான் நீக்குகிறேன்.
கொடியில் உறவைக் கோர்க்கிறேன்.
மடியில் மரபை சேர்க்கிறேன்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (13-Sep-14, 12:01 pm)
Tanglish : vidiyal vidiyattum
பார்வை : 220

மேலே