கருகிய மனம்

என்னை காதலிக்கிறேன் என்று
என்னை தொடர்ந்தாய்....
நான் உன்னை நேசிக்கவில்லை
என் அன்னையும், அய்யனையும்
நேசிக்கிறேன் என்றதுகா இந்த தண்டனை!
நான் உயிராய் நேசிக்கிறேன் என்றாய்
என் உயிரை குடிபதர்க்கா இந்த வாசகம்!
என் மீது நீ ஊற்றிய திராவகம்
என் உயிரை மட்டுமல்லாது
என் உறவுகளின் உயிரையும் கொல்கிறது
கொஞ்சம் கொஞ்சமாய்!!
என் மீது திராவகம் ஊற்றும் முன்
உன் சகோதரிக்கு இப்படி ஏற்பட்டால்
என் நிலைமைதான்
உன் குடும்பத்தின் நிலைமை என்று
ஒரு கணமேனும் நினைத்தால்....
என் உயிர்
என் உறவுகளுக்கு இடையில்
வாழ்ந்து கொண்டிருக்குமே!!
திராவகம் வீசப்பட்ட
என் சகோதரிகளுகாய் இந்த கவிதை சமர்ப்பணம்!!!
-மூ.முத்துச்செல்வி