முற்றும் மறுக்கும் முகமே - இராஜ்குமார்

முற்றும் மறுக்கும் முகமே
=========================
என் விரலோடு இணைந்து
உனக்காய் கவி எழுதிய
எழுதுகோலை இன்றுவரை
தூக்கி எரியாத நான்
நீ காதல் வேண்டாம்
என்றவுடன் ,
எப்படி பெண்ணே
நித்திரை கேட்கும் உன் நினைவை
விழிகள் ரசிக்கும் உன் சிரிப்பை
அர்த்தம் சொல்லும் உன் கோபத்தை
உரிமை கோரும் உன் மிரட்டலை
யாரும் மகிழும் உன் பேச்சை
என்னை வெறுக்கும் உன் மனதை
நிஜத்தில் கலந்த உன் காதலை
காதலில் வாழ்ந்த என்னை
வெட்டி எறிந்தால்
எந்த விதத்தில்
விடைகள் கிடைக்கும்
தட்டி கழித்தால்
எந்தன் இதயம்
உயிரை வெறுக்கும்
விட்டு பிரிந்தால்
உந்தன் முகத்தை
விழியில் வரையும்
- இராஜ்குமார்
நாள் ; 26 - 5 - 2014