பொறுமையே வெற்றியின்கரு

காலமெல்லாம் காத்திரு
நிதம்
ஓலமிடும் அலைகளுக்கு
ஓய்வில்லை.......!

நிதம் நிதம்
மலர்கள் மலர்ந்தாலும்
நிதானமாய் மலரும்
குறுஞ்சி மலர்க்கே மகிமை...!

பொறுமையான மனிதனே
பொங்கிடாதே கடலாய்..
அருமையான சிலையும்
சிற்பியின் பொறுமையால்
பிறந்ததே...!

பொறுமையே வெற்றியின்கரு
சிந்தித்துபாரு
வரலாறு சித்தரிக்கும்....!

காந்தியின் பொறுமையால்
வாங்கினோம் சுதந்திரத்தை
எடிசனின் பொறுமையால்
வந்ததே மின்சாரவிளக்கு....!

காலமெல்லாம் காத்திரு
சிப்பிக்குள் முத்தாய்...
பொறுமையோடு தவமிரு
இலவங்காய்க்குள் பஞ்சாய்...

உன் இலட்சியகனவுகள்
நிச்சயம் ஒருநாள்
நனவாகும்...நீ
முத்தாய் இலவம்பஞ்சாய்
மாறினால்.....

எழுதியவர் : அருண்குமார் அ (15-Sep-14, 9:49 am)
சேர்த்தது : arunkumar
பார்வை : 310

மேலே