ஐயா அம்மா தாயே

சாலையின் நிறுத்தங்களே
இவர்களின் அலுவலகங்கள் ஆயின!
வேகாத வெயிலிலும்கூட
பணிகள் தொடர்ந்து நடந்தன!

ஓடியாடி உழைத்தால்தான்
பிச்சையும் கிடைக்கும்!
தேடிதேடி கேட்டால்தான்
அரைவயிறாவது நிறையும்!

மக்களின் கருணையே
இவர்களுக்கு மூலதனம்!
கிடைக்குமோ கிடைக்காதோ
எனப் போராட்டம்தான் தினம்தினம்!

கையிலிருக்கும் பச்சிளங்குழந்தையும்
சேர்ந்து உழைக்கிறதே!
இது குழந்தை தொழிலாளர்
முறையில் சேராதோ?

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்
இவர்கள் சேர்க்கப்படுகிறார்களா...?
ஒருவேளை கணக்கெடுக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்டு இவ்வாறு ஆனார்களா...?

அதிகாரத்தில் இருப்பவர்களின்
கண்களில் மறந்தும்
தென்பட அவர்களின்
இமைகளே மறுத்துவிடுகின்றன!

வல்லரசு நாடாக்க விரும்பினால்
முதலில் இவர்களுக்கென்று
நலவாரியம் அமைப்போம்
பிச்சைக்காரர்களை வளர்ப்பதற்கில்லை
பிச்சையை ஒழிப்பதற்கு!

எழுதியவர் : அலெக்சாண்டர் (21-Sep-14, 12:01 am)
பார்வை : 74

மேலே