புரியாத புதிர்,,,,

" காட்டாறு நீயென எண்ணியிருந்தேன் ....
" வெறும் கானல் நீர் தானா கண்ணே?

" பூ பூத்ததும் வாசம் வருமென காத்திருந்தேன் ....
" வாசமில்லா மலர் நீயென புரியாமல் போனதடி!!

" இசைத்தால் ராகம் வருமென என்றிருந்தேன்....
" தந்திகள் இல்லாது பழுதான வீணையா நீ ?

" நிலவை மேகம் மறைக்கிறதோ பார்த்திருந்தேன்...
" நிலவேயில்லாத அம்மாவாசை இரவா நீ ?

" நீ கிடைத்தது பிறவி பலன் என நினைத்தேன் ...
" விதி விளையாடியிருப்பது என் வாழ்வில் தானா?

எழுதியவர் : (21-Sep-14, 12:50 am)
பார்வை : 95

மேலே