உனக்கென்ன காதலே - இராஜ்குமார்

உனக்கென்ன காதலே
====================

முழு முதற் கடவுளுக்கு
சதுர்த்தி தினமாம் இன்று

வயலுக்கு போன அப்பாவிற்கு
அறுவடை தினமாம் இன்று

பள்ளிக்கு போக நண்பனுக்கு
விடுமுறை நாளாம் இன்று

விரைவாய் வந்த மாமாவிற்கு
ஓய்வு நாளாம் இன்று

ஊருக்கு வந்த அண்ணிக்கு
திருவிழா தினமாம் இன்று

தேரை இழுக்கும் அன்னைக்கு
காணிக்கை நாளாம் இன்று

ஆசையாய் கிளம்பும் தங்கைக்கு
சுற்றுலா தினமாம் இன்று

உயிரில் கலந்த காதலியே
உனக்கென்ன தினம் இன்று ..????

- இராஜ்குமார்

நாள் : 1 - 9 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (28-Sep-14, 8:45 am)
பார்வை : 101

மேலே