போதும் எனை விட்டுவிடு

பெண்மையாய் உருவெடுத்தேன்
......பேதம்பார்த்து
காகிதமாய் கசக்கிவிட்டாய்..!!!

பிள்ளையாய் பிறப்பெடுத்தேன்
......தவறிப் பிறந்தேனஎன
கருச்சிதைவு செய்து விட்டாய்...!!!


காலமாய் கருவில் உதித்தேன்
......காரணம் ஏதுமில்லைஎன்று
எனை முழுதாய் கழித்தே கடந்தாய்,.....!!!


வேலையாய் வேறு உடைதறித்தேன்
.....வெட்கமின்றி எனை
காணாது முகதிருப்பிச் சென்றாய்....!!!


உண்மையாய் உன்முன் புன்னகைத்தேன்
.....வெடுகென்று எனை
விட்டெறிந்து வீண் வாதம் நடத்தினாய்....!!!


உணவாய் வந்தேன் உனக்காக
.....ஒன்றும் தேவையில்லை
என்று எனை ஒதுக்கிச்சென்றாய்.....!!!


இயற்கை போர்வை கொண்டணைத்தேன்
......ச்சீ தறிக்கெட்டவளே தள்ளிபோ என்று
தாரகையாம் என் மேல் அமிலத்தினை கொட்டிப் பாழாக்கினாய்!!!

உன் தாய்மையின் வடிவம் எடுத்ததாலோ ஏனோ
....மீண்டும் உன்னை மன்னிக்கிறேன்
அலட்சிய படுத்தாது என்னோடு இணைந்துவிடு.....!!!


இப்படி எவ்வுரு எடுப்பினும்
...உன் குணம் மாறாது இருப்பின்
மன்னித்துவிடு இனி என்வழியில் உன்னை நேர்செய்வேன்.....!!!


இல்லை எப்பாடு பட்டாகிலும் மனித புழுவாகிய உன்னை
....கொன்றேத் தீருவேன்
இனி புது உலகமாவது இனிக்கட்டும் என்பதற்காய்...!!!




[இயற்கை தேவதை]

எழுதியவர் : ஜென்னி (1-Oct-14, 5:00 pm)
பார்வை : 130

மேலே