காதலால் இழுத்துச்சென்றாய்-வித்யா

காதலால் இழுத்துச்சென்றாய்......!!-வித்யா

காதல் ஒரு சத்தியம்
ஒரே பாதையில் பயணிக்கும்
இரு வேறு கனவுகளைப
பகிர்ந்துக் கொண்டோம்.............!!

வாழ்வு தொடங்கிய இடம்
அதுவென்று அறியாத நாம்......!!

ஒரு சமயம் நீ
என்னிடம் கேட்டாய்....
காதலை எங்கு தேடுவதென்று..?
அப்போது காதலில்லை என்னிடம்.......!!

பிறிதொரு சமயம்
உன்னிடம் நான் கேட்டேன்
காதலை எப்படி சேமிப்பதென்று.?
அப்போதும் காதலில்லை என்னிடம்....!!

எதிர்பாராப் பிரிவு நாளொன்றின்
நினைவுகளின் நிமித்தத்தில்
நீ வருகை பதிவு செய்தாய்..........!!

அப்போது உன் கண்களில்
கண்டேன்
காதல் எங்கே என.......!!

காதல்......
வாய்ப்புகளுக்கும்
காரணங்களுக்கும்
அப்பாற்பட்டு என்னில்
தனித்து நின்ற போது.......


முன்பு எனை காதலிப்பதாய் கூறி
நீ காத்துக் கொண்டிருப்பதை
உணர்ந்த போது
காதலின் வரையறை
தெரிந்திருக்கவில்லை..........
அன்பே எனக்கு..........!!

இறுதியாக
வாங்கிக் கொடுக்காமல்
கொடுத்து வாங்காமல்
வாங்குதலும் கொடுத்தலுமாய்
வாழும்........ காதல்.......
ஒரு பரிசென்றாய்...........!!
நான் புன்னகைத்தேன்..........!!

பின் நீ பயணப்படும்
தூர தேசங்களுக்கெல்லாம்
உன் காதலால் எனைத
தூக்கித் திரிகிறாய்........

கைகள் வலிக்கும் போது
தோளிலும், மார்பிலும்
எனை சுமக்கிறாய்............

முடியா தருணங்களில்
காதலில் கட்டி
எனை இழுத்துச்செல்கிறாய்..........!!



======================================================================================
உன்னைப் பார்க்காமல்
உன்னிடம் பேசாமல்
உன் நினைவுகளோடு
வாழும் இவ்வாழ்வை
தவமென ஏற்கிறேன்.........!!

உன் மனைவியாய்
வாழும் நாட்களுக்காய்
காத்திருக்கிறேன்............................!!

எழுதியவர் : வித்யா (4-Oct-14, 1:48 pm)
பார்வை : 164

மேலே