பேனாவின் முனை

எண்ணங்களின்
சிதறல் ====

எழுத்துக்களின்
குவிப்பு ===

வார்த்தைகளின்
கூர்மை ===

வாழ்வின்
அனுபவங்கள் ===

நட்பு
பாசம்
அன்பு
வன்முறை
விரோதம்
வலிமை

குணங்களின்
வெளிப்ப்பாடு===

உன்னை
ஓவியன்
என்று அழைப்பேனா ?

சிற்பி என
உரைப்பேனா ?

எழுத்துக்களுக்கு
உயிர் கொடுக்கும்
பிரம்மா என
நினைப்பேனா ?

உணர்வுகள் எனும்
கருவை
கர்ப்பத்திலிருந்து
உலகம் எனும்
பெற்றோர்கள் மூலம்
ஜனனம் அளிக்கும்

உன்னை பற்றி

வர்ணிக்க
பாராட்ட
வார்த்தைகள் இல்லாமல்
பேனாவின்
முனையில் சிக்கி
தவிக்கின்றேன் =====

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (5-Oct-14, 8:57 pm)
Tanglish : penavin munai
பார்வை : 616

மேலே