உன் பிரிவு வியப்பாக இருக்கின்றது 0042

மனதில் மடங்கிக்கிடக்கும்
வார்த்தைகள் கடதாசி வர மறுக்கின்றது
மார்பில் சாய்ந்த மங்கை
மனம் தளர்ந்த போது
புத்தகம் புரட்டும் போது
புதுக்கவிதையாய்
புகழ்ந்த வார்த்தைகள்
இன்று புண்ணாகி எரிகின்ற போது
எண்ணெய் வார்க்கின்றது
மறந்திட முடியா நினைவுகள்
வினோத விமானம் யார் செய்து விடாரோ
வேவு பார்த்து
உன்னையும் என்னையும் பிரிப்பதற்கு
வினாடிக்கணக்கில் விண்கற்கள் பூமி வந்து
பிரகாச ஒளி வீசி
சம்பலாகிப்போனது போல
நீயும் கலங்க வைத்து போனது
வியப்பாகவே இருக்கின்றது
வேதனை தோரணம் கட்டி
வீதியில் ஆடுகின்றது
வேடிக்கை பார்ப்பதற்கு மட்டும்
ஊர் கூடி ஒத்துழைக்கிறது
நான் இறுதியாய் உறங்கிக்கிடந்த போது
இறுதியும் அறுதியாய் வாழும் காதல்
அவள் போலியான காதலுக்காக
எத்தனை பேரை பலியாக்குமோ
தெரியவில்லை..!