காத்திருக்கிறேன் என் காதலை புரிந்துகொள்வாய் என்று 555

என்னவளே...

உன் மீது நான் கொண்ட
காதலை...

நீ என்றுதான் உணர்வாய்
முழுமையாக...

வார்த்தைகளால் சொல்ல
முடிந்ததை...

உன்னிடம் சொல்லிவிட்டேன்...

நான் உன்னை
நேசிக்கிறேன் என்று...

உன் மீது நான் கொண்ட
காதலின் ஆழத்தினை...

சொல்ல தெரியவில்லையடி
எனக்கு...

வார்த்தைகளால் சொல்ல
தெரிந்தால்...

சொல்லி இருப்பேன்...

வார்த்தைகளால் சொல்ல
தெரியவில்லையடி எனக்கு...

உருவமில்லாத காற்றில்தான்
நாம் உயிர் வாழ்கிறோம்...

உருவமில்லாத என்
அன்பினை...

நீ உணரவேண்டுமடி...

புரியாதவளுக்கு
புரியவைக்கலாம்...

புரிந்தும் புரியாமலிருக்கும்
உனக்கு...

தெரியவில்லையடி காதல்
கொண்ட நெஞ்சுக்கு...

ஓர் நாள் புரிந்து கொள்வாய்
என்று காத்திருகிறேனடி நான்...

வெள்ளி கொலுசணிந்த
உன் பாதங்களில்...

நான் மெட்டியிட.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Oct-14, 8:55 pm)
பார்வை : 807

மேலே