அவளது கைக்குட்டையாக மாற்றி

நொடிக்கு நொடி ..
என்னவளின்
உதடு கடித்து ,
சுவாசம் கலந்து ,
கண்களில் அமர்ந்து ,
நெற்றியில் முத்தமிடும்
வரம் வேண்டி
நின்றேன்,
பிரம்மனிடம் ...
அவனோ ..
இவை ,
அனைத்தும் கொடுத்து ,
அவள் ,
காது வருடி ,
மார்பில் நுழைந்து ,
கைகளில் அடங்கிப்போகும் ,
வரமும் கொடுத்தான் ,,
என்னை ,
அவளது ,
கைக்குட்டையாக மாற்றி ...!