கோவில் என்பது இதயம் - தெய்வம் என்பது நம்பிக்கை

அணைகளில் இருந்து
அறிந்து கொள்ளலாம்
அழகிய நதிகளின் அற்புத தவ நிலை .....!!

அணையதுவே ஆண்டவனாம்
அலைபாயும் நினைவதுவே நதிஎன்பதாம்
அடக்கும் சக்தி அறிந்து வெளிப் படுதல்....
ஆண்டவன் சக்தி என உணர்வதாம்.....!!

தடுத்தாட்கொள்ள இறைவனுண்டு
தன்னம்பிக்கை என்றே நமக்குள்ளே - இதை
தன்மையோடு நாம் உணர்வோம் - இறை
தாள் பணிந்தே நாம் வாழ்வோம்....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (8-Oct-14, 6:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 94

மேலே