என்ன அழகு

நிற்காமல் தூவும் மழையில் அசையாமல் நனைந்து நிற்கிறேன் என்னை மறந்து யோசிக்கிறேன் இந்த பெண்ணழகைக் கண்டு
மஞ்சள் பூசிய மங்கை முகம்
இவள் பேசாத மவுனத்தில் வெண்ணிலவு ராகம்
குழி விழுந்த சிரிப்பிலே குழந்தை முகம்
இவள் கொஞ்சி பேசும் தமிழிலோ நான் காணாத ஒரு சுகம்
சுடிதார் அணிந்த சொர்கத்து தேவதை
இவள் சுழலாமல் நிற்கும் காற்று வான் மழை
வளையல் போட்டிருக்கும் வண்ணத்து பூச்சி
இவள் வாடாமல் வாசம்தரும் மல்லிகை மலர் பூந்தொட்டி
இன்னும் இவள் அழகை வர்ணிக்க வார்த்தை இன்றியே
வான் துவும் மழையிலும் வாடிய மலர்போல் தரையில் விழுந்தேன் இவள் அழகில் .