இளமை மறந்து

இளமையில் விட்ட தவறுக்காய்
...........................................................................
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
தேடினேன்
ஓடினேன்
தென்றல் என பாடினேன்
என் இளமையை மறந்து .....
சுந்திரத்தை பயன்படுத்தினேன்
சுகமாய் திரிந்தேன்
சுடுகாடாய் ஆகினேன்
பிறர் சொல் மறந்து......
அடிகள் வாங்கினேன்
கைகள் ஓங்கினேன்
தவறுகள் இளைத்தேன்
செய்த பிழை மறந்து.....
பாசங்கள் வைத்தேன்
பாவிகள் தோன்றினர்
பாதைகள் தொலைத்தேன்
உண்மை அன்பை மறந்து .....
குற்றங்கள் செய்தேன்
குற்றவாளி ஆகினேன்
குனிந்து நிற்கிறேன்
குடும்பத்தின் மாண்பை மறந்து ....
சந்தோசம் கேட்டேன்
சலங்கை ஒலி போல
சத்தமாக திரிந்தேன்
சமூகத்தின் நன்மை மறந்து .....
விளையாடினேன்
வில்லங்கம் தேடினேன்
விரோதியாக பார்க்கிறேன்
நற் செயல்களை மறந்து .......
ஒதுங்கினேன்
ஒதுக்கப்பட்டேன்
ஒத்துக் கொள்ளாமல் என் தவறை
ஒற்றுமையை மறந்து .....
வாடினேன்
வருந்தினேன்
வாழ்கையை நினைத்தே
வார்த்தைகள் மறந்து ...
தேடினேன்
ஓடினேன்
தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டேன்
கவலைகள் மறந்தன .....