கண்ணீர் துடைக்காத கதை - இராஜ்குமார்

கண்ணீர் துடைக்காத கதை
=============================

ஓரிரு வார்த்தை
உன்னிடம் பேச - ஏன்
நேரத்தில் நிமிடமில்லை ...??

ஓரிரு முறை
உன்முகம் காண - ஏன்
புவியில் இடமில்லை ..??

நீ நடந்து வந்த பாதையும்
நீ கடக்க போகும் பாதையையும்

எந்தன் கண்கள்
கண்ணீர் தூவியாவது
காத்து நிற்கும்

உண்மை காதல் இதுவென்றால்
விளையாடும் விதியும்
விளக்கம் சொல்லாமல் போகட்டும்

வீதி மண்ணில் பிறந்து
காதல் என்னில் வளர
வாசம் காற்றில் பறந்து
தேகம் முழுதாய் மறந்தேன்

கண்ணீர் துடைக்காத
கதைகளின் கருவாய்
எந்தன் காதல் ...

- இராஜ்குமார்

நாள் ; 30 - 11 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (11-Oct-14, 5:06 pm)
பார்வை : 324

மேலே