நாளைய மனிதன்

நேற்றைய மனிதன்
மரம் நட்டான் கனி பறிக்க
முற்போக்குச் சிந்தனையுடன்
தன் வீட்டையே தோட்டமாக்கினான்

இன்றைய மனிதன் அதை அழித்தான்
கௌரவம் நாகரீகம் என்று பணம்
கொட்டி பல மாடி வீட்டை கட்டி எழுப்பினான்

நாளைய மனிதன் நிலாவில் இடம்
தேடப் புறப்படுவான் அங்கே வீடு கட்ட
புதுமைகள் புகுந்து பழமைகள் மறைக்கப்
படுகின்றன பால் ஊட்டும் போதே புகட்டுங்கள்
தமிழனின் வரலாறை தமிழின் இனிமையை
இயற்கையின் நன்மையை

மாற்றம் காண வேண்டும்
ஏமாற்றம் இல்லா மாற்றமாக
அமைய வேண்டும் மனிதன்
முன்னேற வேண்டும் உலகை
அழிக்காமல் வளர வேண்டும்
இவைகளை நாளைய மனிதனும்
மதிக்க வேண்டும் நிலையான
இன்பம் கிடைக்க வேண்டும்

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (13-Oct-14, 7:33 pm)
Tanglish : naalaiya manithan
பார்வை : 392

மேலே