உயர்ந்த உள்ளம்

தான் வசதி படைத்தவன் என்பதை அனைவரும் அரித்து கொள்ளும் வண்ணம் ஆடை, அணிகலன் அணிந்த, பணக்கார இளைஞர் ஒருவர் கைகளில் விலையுயர்ந்த கைபேசியுடன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தார்.

மனதை சுண்டி இழுக்கும் மணம் மிகுந்த சுண்டலை விற்றுக்கொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுவன் எட்டி நின்று அந்த இளைஞரின் கைபேசியையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே அருகில் வந்த அந்த இளைஞர் சொன்னார், “இது என் அப்பா எனக்கு பிறந்தநாளன்று பரிசாக அளித்தது”.

சிறுவன் முகத்தில் வியப்பு "அப்படியா !" என்ற ஆச்சரியத்துடன்.

“உனக்கு அப்படி ஓர் அப்பா இருந்திருக்கலாம்
என்று ஆசைப்படுகிறாயா?” என்று அந்த இளைஞர் கேட்டார்.

சிறுவன் சொன்னான், இல்லை! அப்படியோர் அப்பாவாக நான் என் மகனுக்கும், என்னைப் போன்ற யாருமற்ற ஏழைகளுக்கும் எதிர்காலத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என்றான்.

நிச்சயமாக அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட சிறுவனின் நம்பிக்கை, வாழ்வில் அவனை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் !

அப்படித்தானே ?

எழுதியவர் : கர்ணன் (14-Oct-14, 11:00 pm)
Tanglish : uyarntha ullam
பார்வை : 457

மேலே