நிலாப்பெண்ணே

எங்கே மறைந்து கொண்டாய் நீ
எங்கே மறைந்து கொண்டாய்
நிலாப்பெண்ணே மேகத் திரையில்
ஏன் மறைந்து கொண்டாய்
நீ திருடன் அல்லவே
இருளில் மறைய
இருள் போக்கும்
மாய விளக்காயிற்றே
தேயும் மாயம்
வளரும் மாயம்
கற்ற மந்திரவாதி
அன்றோ நீ
கண் இமைக்கும்
நேரத்தில் எழுந்திடுவாய்
நாங்கள் எழுமுன் வீழ்ந்திடுவாய்
அலைகளை வீறு கொண்டு
எழுப்பிடுவாய்
தண்மையென்னும் கதிர்
கொண்டு
காதலரையும் சுட்டிடுவாய்
இம்மாற்றலை எங்கு
பயின்றாய்
வெண்ணிலவே
ஞாயிறு என்னும் தந்தைக்கு
அடங்கிய பிள்ளை போலே
அடங்கினாலும்
உன் எழில் முகம் காட்டி
அவரையும்
மிஞ்சுகிறாய்
மறையாதே நிலாப்பெண்ணே
நீ மறையாதே
இப்புவி மக்களெல்லாம்
உன்னைக்
காமுருகிறார்கள்

எழுதியவர் : ரமணி (18-Oct-14, 11:49 am)
பார்வை : 107

மேலே