கவிதை தலைப்பு - தாய் தந்தை அன்பு
தாய்
ஒரு விதையை வாழவைத்த மழை.
ஒரு ஊசியை உருவாக்கிய இழை.
தொப்புள் கொடியைத் தொடரவைத்தக் காதை
தன் உதிரத்தை உணவாக்கிய சதை.
பிறப்பின் புனிதத்தை உணர்த்தியக் கீதை.
கருவிற்கு சுவாசம் தந்த கோதை.
உறவுக்குள் உணர்வினை உணர்த்தியப் பெண்மை.
உலகமேப் போற்றும் அதுதான் தாய்மை.
சொந்தமும் பந்தமும் - புடை
சூழ உயிர்த் தந்த பிரம்மன். - பூமியில்
தாய்மையின் நிலையறியவந்த - நாம்
பிற மண் - பிற மண்ணில்
பிற விதைகள் வளர்தல் போல் - அவள்
கரு மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள்.
அடைக் காத்துக் குஞ்சு பொறிக்கும் கோழி இனங்கள்.
இடைக் காத்து நம்மை பேணிக்காக்கும்
பெண்டிர் யாவரும் நம்மின் தோழி இனங்கள்.
தாய்மையைப் போற்றுவோம் - அவளின்
தூய்மையைத் துதிப்போம்.
இறைவனிடம் வரம் தேடும் '
இதயங்களே. - தாய்மையின்
உதயத்தைப் போல் ஒளிரும்
இதயத்தைத் தாவென
வரமாய்க் கேளுங்கள். - தாயின்
தரத்தை உணர்ந்து வாழுங்கள்.
தந்தை.
தாய் அவள் உயிர்க் கொடுத்தாள்.
தந்தை அவர் உழைப்பைக் கொடுத்தார்.
தந்தை வாழ்க்கையின் வழிக்காட்டி.
அவரது நினைவுகளே நமது நாட்காட்டி.-என்றும்
அவரே நமக்குக் கைக்காட்டி.
நம் எல்லோரின் வாழ்க்கையின்
புனிதப் பயணத்தின் தேரோட்டி.
தந்தையை மறவோமோ.?
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்போமே.
தந்தையை என்றும் மதிப்போமே.
அன்பு
அன்னையவள் உயிரூட்ட
அப்பனவன் உணர்வூட்ட - நம்முள்
அரவணைத்து வளர்வது
அன்பு எனும் வாடா மாலையே.
இம்மூன்றும் பெறாதவன்
இப்பூமியில் எவரும் உண்டோ?
இம்மூன்றையும் மதியாதவன்
இப்புவியில் சிறப்பதுண்டோ?