இல்லாமல் போன சரி
![](https://eluthu.com/images/loading.gif)
காரணம் இடம் மாறி
தவறுவதால்
சரிகள்
காரணமாகின்றன....
நிஜங்கள் இலை மாறி
அமரும் இரவாகிறது
நிலவில்லா தொலைதல்
நிழலாகிறது......
உள் கொண்ட வெளிகளில்
உள்ளார்ந்த வெளிகள்
வெளியாகவே
உள் செல்கிறது.....
திரும்பவும்
காரணம் இன்றி
தவறாகிறது
இல்லாமல் போன
சரி.....
கவிஜி