இதழின் ரேகை

இதழின் ரேகை

இதயம் இணைந்து,
இதழ்கள் இணையும் தருணம்!
வெட்கம் கொண்டு
கொடுத்த திருட்டு முத்தம்,
விடைபெறும் தருணம்!

நேரம் செல்ல செல்ல
நெருடல் இல்லை!
காலம் கடந்தாலும்
கவலை இல்லை!

உன் அழகை கண்டு
கண்கள் மேய!
காதல் தோற்று
காமம் ஆக!

என் இதழின் ரேகை
உன் இதழைத் தேட!
உன் கைவிரல் தீண்டி
மௌனம் கொண்டேன்!

மௌனம் என்னை ஏதோ செய்ய,
மையல் கொண்டே
நெருங்கி வந்தேன்!
சத்தமில்லா முத்தம்
கொடுத்தே,
வெட்கம் கொண்டே
விலகிச் சென்றேன்!

ஆடை கவிழ்ந்து
அவசர முத்தம்!
உன் மேனியெங்கும்
எந்தன் சத்தம்!
வியர்வை வந்தும்
தொடரும் யுத்தம்!
மோகம் கொண்டு
மூடிய கண்கள்!
முடிந்த பின்பு
அணைத்த மாயம்!

எழுதியவர் : Sherish பிரபு (19-Oct-14, 4:00 pm)
Tanglish : ithazhin regai
பார்வை : 211

மேலே