அம்மா

அம்மா
அம்மா உன் கருவறை காதலன் பேசுகிறேன்...,

பச்சப்புள்ள பாதம் தொட்டு பக்குவமா சொடக்கெடுத்து
கை புடிச்சி நடக்க வச்ச தவறி நானும் விழுந்துபுட்டா தனக்குள்ள நொந்துக்கிட்ட
ஊர் கண்ணு பட்டுடும்னு ஒடம்பெல்லாம் கருப்பு மைய் பூசிவச்ச
எனக்காக உன் சுவாசம் பாத்து மாசம் பகிர்ந்துகிட்ட
போரண்டுதானும் படுத்தாக்கா புள்ள தடம்போரண்டு போகும்னு
மல்லாக்க படுத்துகிட்டு மாசமா கனவுகண்ட
பச்ச தண்ணி குடிச்சாலும் வலிக்காம பாத்துகிட்ட
என் பல்லு பட்ட இரணத்தையெல்லாம் பதமாதா தாங்கிகிட்ட
வெய்யில் பட கூடாதுனு முந்தானையில் மூடிவச்ச
உன் வெக்கத்த வெலக்கிவச்சி என் வயிறார பால் கொடுத்த
அழசத்தம் கேக்கையில அலறித்தா ஓடிவருவா
அஞ்சாறு முத்தத்தை அழுத்தமா நீ தருவ!

எழுதியவர் : bharathi (19-Oct-14, 11:24 pm)
Tanglish : amma
பார்வை : 224

மேலே