எனதான தீபாவளி - ரகு

இரட்டிப்புச் சம்பளம்
என்றதும்
இரவு பகல்
பாராமல் தொடர்
வேலையில்
தொலைந்து
போயிருந்தேன்
ஓரிரு நாட்களாக

இனிப்பு ,பட்டாசு
குழந்தை மனைவிக்குப்
புத்தாடை சகிதம்
ஒருவழியாக
வீடுதிரும்பினேன்

பரஸ்பர
விசாரிப்புகள் கூட
மறந்து போக
களைப்பில்
கண்ணயர்ந்தேன்
வந்தும் வராததுமாய்

எழுந்து பார்த்தபோது
தீபாவளி
முடிந்து போயிருந்தது

தெருவில்
இறங்கி நடந்தேன்
வெடித்த
பட்டாசுகளுக்கிடையில்
இருந்த வெடிக்காத
பட்டாசொன்று
பல்லிளித்தது
என்னைப்பார்த்து...!

எழுதியவர் : அ.ரகு (20-Oct-14, 1:30 pm)
சேர்த்தது : சுஜய் ரகு
பார்வை : 77

மேலே