மெல்ல மெல்ல தமிழ் இனி

பிஞ்சுக் குழந்தை கொஞ்சிப் பேசும்,மழலைத் தமிழ்
கேட்டு கேட்டு நெஞ்சம் நெகிழும்,அன்னைத் தமிழ்

போர்க்களத்தில் நெஞ்சம் நிமித்தும் ,வீரத் தமிழ்
பொறுமை கொண்டு ரௌத்திரம் பழக்கும்,திரத் தமிழ்

பூவயற்கு பூசூடி வெட்கிக் கொள்ளும் ,நாணத் தமிழ்
நங்கையர்கள் நடனமாடி நடிக்கும் ,நாடகத் தமிழ்

விருந்தில் விரோதிக்கும் இலைபோடும் ,கருணைத் தமிழ்
வானுக்கும் மண்ணுக்கும் சாரம் கட்டும் ,சங்கத் தமிழ்

சொல்ல சொல்ல இனிக்கும் இந்தத் இன்பத் தமிழ்
இனி,மெல் மெல்ல சாகுமோ?

திறம் செறிந்து விளங்கும் வீரத் தமிழுக்கு
விஞ்ஞானத்தில் வீரியம் இல்லையோ??

அன்பும் அரவணைப்பும் கொண்ட இன்பத் தமிழுக்கு
நாட்டை ஆளத் தெரியவில்லையோ ?

பார்புகழ் கொண்ட சங்கைத் தமிழுக்கு
நாகரிக வளர்ச்சியில் முதிர்ச்சி இலையோ??

பேதைகள் பேதளிந்து கூறும் கூற்றுகளுக்கு
அத்தனை சக்தி வண்டு விட்டதோ ?

மேகங்கள் மூடி மறைத்தாலும்,என்றும்
சுட்டெரிக்கும் சூரியனை மறைக்க முடியாது.

தமிழன்னை அமைதி காக்கிறாள், விரைவில்
எரிமலையென வெகுண்டேலுவாள்,அக்கணம் உலகமெங்கும்
தமிழ்ச் சுடரி ஒளி வீசும்.........கலங்காதே !!!
மெல்ல மெல்ல தமிழ் இனி உலகாளும்!!!!!

எழுதியவர் : விஷ்ணு பிரதீப் (24-Oct-14, 12:54 pm)
பார்வை : 135

மேலே